சிறந்த கணவனாக இருக்க... விராட் கோலியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!

Relationship Lessons: திருமண உறவில் சிறந்த கணவராக திகழ விராட் கோலியிடம் (Virat Kohli) நீங்கள் சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Aug 23, 2024, 10:17 PM IST
  • விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை மணந்துள்ளார்.
  • இருவருக்கும் தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
  • விராட் கோலி, சிறந்த கணவருக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
சிறந்த கணவனாக இருக்க... விராட் கோலியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்! title=

Relationship Lessons From Virat Kohli: விராட் கோலி என்ற பெயரை கேட்டாலே  எனக்கு உடனே மனதிற்கு வருவது விடாமுயற்சியுடன் கற்பது தான். ஆம், சச்சின் டெண்டுல்கரை போல் விராட் கோலி ஒன்றும் பிறவி கிரிக்கெட்டர் இல்லை. அதாவது, சச்சினுக்கு 16 வயதிலேயே கிரிக்கெட்டின் நுணுக்கங்கள் கைவரப்பெற்றது. ஆனால், நவீன யுகத்தில் சச்சினின் சாதனைகளை தகர்த்துக்கொண்டிருக்கும் விராட் கோலி படிப்படியாக, தனது தொடர் பயிற்சியின் காரணமாக விடாமுயற்சியுடன் அனைத்தையும் கற்றுக்கொண்டு இந்த உயரத்தை அடைந்தார் எனலாம். 

போட்டி மீதான விழிப்புணர்வாக இருக்கட்டும், கேப்டன்ஸியில் காட்டும் தீவிரமாக இருக்கட்டும் ஏன் இந்திய அணிக்கு பிட்னஸிற்கு முதன்மையானவராக திகழ்வதற்கும் சரி விராட் கோலி விடாமுயற்சியுடன் கற்றுக்கொண்டதுதான் காரணம். எனவே, இப்போது உங்களது துறையில் சில விஷயங்கள் தெரியவில்லை என நீங்கள் வருந்தினால், விராட் கோலியை உடனே மனதில் வைத்து அதனை விடாமுயற்சியுடன் கற்றுக்கொள்ள தொடங்குங்கள். நிச்சயம் நீங்களும் அந்த உயரத்தை அடைவீர்கள். 

விராட் கோலி போல்...

அந்த வகையில், இங்கு விராட் கோலியிடம் இருந்து மற்றொரு விஷயத்தை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அது வேறு ஒன்றுமில்லை. உங்களின் காதல் உறவில் சிறந்த காதலனாகவும், திருமண உறவில் சிறந்த கணவராகவும் இருக்க விராட் கோலியிடம் நீங்கள் சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். விராட் கோலி அவரின் திருமண உறவில் பின்பற்றும் பண்புகளை நீங்கள் வளர்த்துக்கொள்வதும் உங்களின் தனிப்பட்ட வாழ்வில் நன்மையை தரும். அவை குறித்து இங்கு விரிவாக காணலாம். 

மேலும் படிக்க | ஆண்களின் இந்த உறுப்புகளை பார்த்து தான் பெண்கள் சொக்கிப் போகிறார்களாம்..!

கிரிக்கெட் வீரரான விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துகொண்டார். தற்போது அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஒரு கணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விராட் கோலி திகழ்கிறார். குடும்ப வாழ்வையும், பணி சார்ந்த வாழ்வையும் சரியாக கையாளவதில் விராட் கோலி கைத்தேர்ந்தவர். 

விராட் கோலியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

விராட் கோலி எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சரி அவரது மனைவி அனுஷ்கா சர்மாவைதான் முதன்மைப்படுத்துவார். 2020-2021 ஆஸ்திரேலியாவில் பார்டர்-கவாஸ்கர் கோப்பை நடந்துகொண்டிருந்த போது தனது முதல் மகள் பிறந்ததற்கு உடனே நாடு திரும்பினார். இரண்டாவது மகன் பிறப்பதற்கு முன்பாகவே மனைவியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக சர்வதேச தொடர்களை கூட தவிர்த்தார். 

அதுமட்டுமின்றி, டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு அணியே வெற்றி மகிழ்ச்சியில் கொண்டாடியபோதும், மறக்காமல் தனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு வீடியோ கால் பேசி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். பணி சார்ந்த வாழ்வையும், குடும்ப வாழ்க்கையும் விராட் கோலி போல் நிர்வகிக்கக் கற்றுக்கொண்டு, இதுபோல் உங்களின் மனைவியை முதன்மைப்படுத்துங்கள்.

மனைவிக்கும் இதில் முக்கிய பங்குண்டு

அதுபோல் விராட் கோலியும் சரி, அனுஷ்கா சர்மாவும் சரி தங்களின் தனிப்பட்ட வெற்றிகளுக்கும் மட்டுமின்றி மற்றொருவரின் வெற்றிகளுக்கும் மகிழ்ச்சியடைவார்கள். இருவரின் இந்த புரிதல் உங்கள் உறவிலும் தேவை. இங்கு வெற்றி என்பது ஒருவருக்கானதும் இல்லை, ஒருவரால் அடைந்ததும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். விராட் கோலியும், அனுஷ்காவும் தங்களுக்குள் அதிக நேரம் செலவழித்துக்கொள்வார்கள். அவர்களின் இன்ஸ்டாகிராமை பார்த்தாலே இது உங்களுக்கு புரியும். எனவே உங்கள் மனைவியுடனும் நீங்கள் நேரம் செலவழிக்க விரும்புங்கள். 

விராட் கோலி ஒரு கட்டத்தில் மோசமான பார்மில் இருந்தார். அதாவது, விராட் கோலியின் 70ஆவது சர்வதேச சதத்திற்கும், 71ஆவது சதத்திற்கும் சுமார் 1019 நாள்கள் இடைவெளி இருந்தது. இந்த மூன்றாண்டு காலத்தில் விராட் கோலியை மனம் தளராமல் வைத்திருந்தது அனுஷ்கா சர்மா கொடுத்த ஆதரவும், நம்பிக்கையும்தான். இதை விராட் கோலி பல சந்தர்பங்களில் வெளிப்படுத்தி உள்ளார். அதன்பின் சதங்களையும், ரன்களையும் விராட் கோலி குவிக்கும் போது கோடிக்கணக்கான ரசிகர்களை விட அனுஷ்காவே அதிக மகிழ்ச்சியுடன் இருப்பார் அல்லவா... மனைவி அளிக்கும் ஆதரவை ஏற்றுக்கொண்டு நம்பிக்கையுடன் செயல்படுங்கள். 

முன்னரே சொன்னது போல், விராட் கோலி தொடர்ந்து விடாமுயற்சியுடன் கற்றுக்கொண்டே இருப்பவர், தொடர்ந்து வளர்ச்சி அடைந்தும் வருகிறவர். இதை நீங்கள் பின்பற்றி வாழ்வில் முன்னேற்றத்தை காணுங்கள். 

மேலும் படிக்க | இந்த 5 சைலண்ட் சிக்னல்கள்... அவர் உங்களை காதலிக்க அதிக வாய்ப்புள்ளது!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News