)
https://zeenews.india.com/tamil/health/kitchen-spices-for-weight-loss-belly-fat-reduction-turmeric-ginger-amla-honey-barley-health-tips-in-tami-539392நாம் உணவில் தினமும் அரிசி அல்லது கோதுமை உணவுகளை தான் அதிகம் சேரிக்கிறோம். ஆனால், அதற்கு பதிலாக, முடிந்த வரை சிறு தானியங்களை பயன்படுத்துவது சிறந்த பலனைக் கொடுக்கும். வாரத்தில் மூன்று முறையாவது சிறூ தானியங்கள் உணவில் இருப்பது மிகந்த பலனைத் தரும். அரிசி மற்றும் கோதுமையில் கார்போஹைட்ரேட் என்னும் மாவுச் சத்து மற்றும் கலோரிகள் அதிகமாக உள்ளன. அதனால், ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், அரிசி கோதுமைக்கு பதிலாக, குளூட்டன் அல்லாத சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம் (Millets for Weight Loss).
கேழ்வரகு, கம்பு, ராகி என்னும் கேழ்வரகு, தினை குயினோவா ஆகியவை சிறு தானியங்களில் அடங்கும். அவற்றில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இந்த தானியங்களை சூப்பர்ஃபுட் ஆக்குகின்றன. கோதுமை மற்றும் அரிசி போன்ற பொதுவான தானியங்களுடன் ஒப்பிடும்போது, சிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. கொழுப்பை எரித்து, வளர்சிதை மாற்றத்தை தூண்டு ஆற்றல் இவற்றுக்கு உண்டு. ஏனெனில் இவற்றில் மாவுச் சத்து குறைவாக உள்ளது. நார் சத்து அதிகம் இருக்கிறது.
சிறுதானியங்களை உட்கொள்வது எடை இழப்புக்கு (Weight Loss Tips) உதவுவதோடு மட்டுமல்லாமல், எலும்புகளை வலுப்படுத்துகிறது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் நீரிழிவு போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. அதனால் தான், ஐக்கிய நாடுகள் சபை 2023 ஆம் ஆண்டை சிறுதானியங்களின் ஆண்டாக அறிவித்தது. சிறு தானியங்களின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஐநா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
சிறுதானியங்களில் உள்ள சத்துக்கள் (Millets Health Benefits)
சிறுதானியங்களில் உடலுக்கு மிகவும் அவசியமான புரதச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், துத்தநாகம், அமினோ அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன என ஆயுர்வேதம் மற்றும் பஞ்சகர்மா மையத்தின் மருத்துவர் அமித் குமார் கூறியுள்ளார்.
செரிமானத்தில் நன்மை பயக்கும் (Digestion)
சிறுதானியங்களில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றை சுத்தப்படுத்தவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு, சிறுதானியங்களை உட்கொள்வது நல்ல பலன் கொடுக்கும். ஏனெனில் இவற்றில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிக அளவில் உள்ளன.
இதய ஆரோக்கியம் (Heart Health)
சிறுதானியங்களில், வைட்டமின் பி, குறிப்பாக பி-3 என்னும் நியாசின் நிறைந்துள்ளது. இது ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவுகிறது. ட்ரைகிளிசரைடுகள் இதய நோய் மற்றும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கின்றன, எனவே சிறுதானியங்களை உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்
சிறுதானியங்கள், குறிப்பாக ராகியின் கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவு அரிசி, கோதுமையை விட மிக குறைவாக உள்ளது. மேலும் கலோரிகளும் குறைவு. மேலும் நார் சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளதால், இதனால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ