கலப்படம் மஞ்சளை ஒரு நொடியில் கண்டுபிடிப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ்

Fake Turmeric | கலப்படம் செய்யப்பட மஞ்சளை வெறும் ஒரு நொடியில் கண்டுபிடித்துவிடலாம். அது எப்படி? என்ற விளக்க வீடியோவை மத்திய உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 15, 2024, 01:54 PM IST
  • மார்க்கெட்டில் விற்பனையாகும் கலப்பட மஞ்சள்
  • 5 வழிகளில் கலப்பட மஞ்சள் கண்டுபிடிக்கலாம்
  • வெறும் தண்ணீரில் மஞ்சளை போட்டு கண்டுபிடிக்கலாம்
கலப்படம் மஞ்சளை ஒரு நொடியில் கண்டுபிடிப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ் title=

Fake Turmeric Tips | இப்போது உணவு கலப்படம் பெருகிவிட்டது. அன்றாடம் பயன்படுத்தும் சாம்பார் உள்ளிட்ட மசாலா தூள்களில் இருந்து மிளகு வரை கலப்படம் செய்யப்படுகின்றன. அந்தவகையில் தினமும் குழம்பு வைப்பதற்காக அதிகம் பயன்படுத்தப்படும் மஞ்சளில் கலப்படம் செய்யப்படுகிறது. மார்க்கெட்டிலும் குறைந்த விலையில் போலி மஞ்சள் தூள் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், நீங்கள் உபயோகிக்கும் மஞ்சள் உண்மையானதா? அல்லது போலியானதா என்பதை ஈஸியாக கண்டுபிடித்துவிடலாம். வெறும் ஒரு நொடியில் கலப்பட மஞ்சளை கண்டுபிடித்துவிட முடியும். போலி மஞ்சள் தூளை எப்படி கண்டுபிடிக்கலாம் என மத்திய உணவு பாதுகாப்பத்துறை வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் விளக்கியுள்ளது. 

கலப்பட மஞ்சளை கண்டுபிடிப்பது எப்படி?

கலப்பட மஞ்சளை ஒரு நொடியில் தண்ணீரில் போட்டு கண்டுபிடித்துவிட முடியும். ஒரு ஸ்பூன் மஞ்சளை ஒரு கிளாஸ் தண்ணீரில் போடவும். 20 நிமிடங்களுக்கு பிறகு, மஞ்சள் தண்ணீருக்கு அடியில் இருக்கிறதா? அல்லது தண்ணீரில் கரைந்ததா என்பதைப் பார்க்கவும். தண்ணீரில் கரைந்திருந்தால் அது போலியானது. கீழே இருந்தால் அது உண்மையான மஞ்சள்.

வாசனை வைத்து அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி?

மஞ்சளின் வாசனையை வைத்து எளிதில் அடையாளம் காணலாம். உண்மையான மஞ்சள் புதிய மஞ்சள் வாசனை போல் இருக்கும். புதிய உண்மையான மஞ்சள் அருகில் செல்லும்போதே வாசம் கமகமவென வீசும். சிறிய தொலைவுக்கு கூட மஞ்சள் வாசனை வீசும். அதே நேரத்தில், போலி மஞ்சளுக்கு வாசனையே இருக்காது. 

மேலும் படிக்க | நேரு பிறந்தநாளில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது ஏன்? இதுதான் காரணம்!

போலி மஞ்சளை கண்டுபிடிப்பது எப்படி? வீடியோ 

 

நிறம் மூலம் அடையாளம்

உண்மையான மஞ்சளின் நிறம் அடர் மஞ்சள். அதேசமயம் போலி மஞ்சளின் நிறம் மிகவும் பிரகாசமாக இருக்கும். உண்மையான மஞ்சளை அடையாளம் காண நீங்கள் அதை ஒரு வெள்ளை துணியில் அதை தேய்க்கலாம். மஞ்சள் உண்மையானதாக இருந்தால், அதன் நிறம் எளிதில் ஆடைகளில் ஒட்டும். போலியானதாக இருந்தால் ஒட்டாது. 

சோப்பு மூலம் சோதனை

சோப்பு சோதனை மூலம் உண்மையான மஞ்சளை நீங்கள் அடையாளம் காணலாம். இதற்கு முதலில் மஞ்சள் பொடியை கைகளில் தடவவும். சிறிது நேரம் கைகளில் தேய்க்கவும். இப்போது அதை சோப்புடன் கழுவவும். மஞ்சளின் நிறம் எளிதில் கைகளில் இருந்து வெளியேறினால் அது போலி மஞ்சளாக இருக்கலாம். பொதுவாக, உண்மையான மஞ்சளின் நிறம் விரைவில் மங்காது.

மஞ்சளின் நன்மைகள் 

பொதுவாகவே மஞ்சள் பல ஆரோக்கிய நன்மைகள் கொண்டிருக்கிறது. இதில் குளுக்கோஸை கட்டுப்படுத்தி நீரிழிவு நோய் வரமால் செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. தோல் பிரச்சனைகளுக்கு மஞ்சள் நிவாரணம் அளிக்கும். சிராய்ப்புகள், காயங்கள் ஏதேனும் ஏற்பட்டால் அதனை சரி செய்யவும் மஞ்சள் பயன்படுத்தலாம். கிருமி நாசினியாகவும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய நன்மைகளைக் கொண்ட மஞ்சளில் கலப்படம் செய்யபடுகிறதா என்பதை எல்லோரும் அறிந்து கொள்வது அவசியம். இல்லையென்றால் நாளடைவில் மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். 

மேலும் படிக்க | குஷ்பூ சொன்ன கேரட் துருவல் எண்ணெய்! முகத்தில் தேய்த்தால் என்ன பலன் கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News