புது டெல்லி: இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் 14 நாட்கள் வங்கிகள் இயங்காது. பண்டிகைகள் காரணமாகவும், சில வாராந்திர விடுமுறை காரணமாகவும் வங்கிகள் செயல்படாது. எந்த நாட்களில் வங்கிகள் மூடப்படும் ஏன்? எதற்கு தெரிந்துக்கொள்ளுங்கள்
டிசம்பர் 3 கனகதாஸ் ஜெயந்தி (Kanakadas Jayanti). அதே நாளில் புனித பிரான்சிஸ் சேவியரின் (St. Francis Xavier) திருவிழாவும் உள்ளது. டிசம்பர் 6 ஒரு ஞாயிற்றுக்கிழமை. பின்னர் 12 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை வங்கி விடுமுறை. அடுத்தது டிசம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை (Sunday). அதாவது, வார விடுமுறை காரணமாக, வங்கி தொடர்பான பணிகள் இந்த நாட்களில் நடைபெறாது.
அதே நேரத்தில், டிசம்பர் 17 அன்று லோசாங் திருவிழா (Losong Festival) உள்ளது. 18 ஆம் தேதி U Soso Tham நினைவஞ்சலி ஆண்டுவிழா. கோவா விடுதலை தினம் 19 ஆம் தேதி நடைபெறும். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிக்கு விடுமுறை.
ALSO READ | டிசம்பர் 1 முதல் மாற இருக்கு 5 முக்கியமான மாற்றங்கள் என்னென்ன?
கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக 24 மற்றும் 25 ஆம் தேதி வங்கிகள் மூடப்படும். பின்னர் 26 ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை. வங்கி செயல்படாது. அடுத்த நாள் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வார விடுமுறை காரணமாக வங்கி செயல்பட சாத்தியமில்லை.
டிசம்பர் 30 சுதந்திர போராட்ட வீரர் யூ கியாங் நங்பாவின் (U Kiang Nangbah) நினைவஞ்சலி தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் டிசம்பர் 31 அன்று வருடத்தின் கடைசி நாள் என்பதால், இந்த நாளிலும் வணிகள் மூடப்படும்.
இருப்பினும், இந்த 14 நாட்கள் விடுமுறை நாட்களில் உள்ளூர் விடுமுறைகளும் அடங்கும். இந்த விடுமுறைகள் வெவ்வேறு மாநிலங்களின்படி இருக்கும் என்று அர்த்தம்.
ALSO READ | Bank Holidays Alert! : டிசம்பர் 2020 இல் வங்கி விடுமுறைகள் எப்போ? இங்கே சரிபார்க்கவும்!
03 டிசம்பர் வியாழக்கிழமை கனகதாஸ் ஜெயந்தி
06 டிசம்பர் ஞாயிறு வார விடுமுறை
12 டிசம்பர் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை
13 டிசம்பர் ஞாயிறு வார விடுமுறை
17 டிசம்பர் வியாழக்கிழமை லோசாங் திருவிழா
18 டிசம்பர் வெள்ளிக்கிழமை U Soso Tham நினைவஞ்சலி
19 டிசம்பர் சனிக்கிழமை கோவா விடுதலை தினம்
20 டிசம்பர் ஞாயிறு வார விடுமுறை
24 டிசம்பர் வியாழக்கிழமை கிறிஸ்துமஸ் முந்தைய நாள்
25 டிசம்பர் வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை நாள்
26 டிசம்பர் நான்காவது சனிக்கிழமை
27 டிசம்பர் ஞாயிறு வார விடுமுறை
30 டிசம்பர் யூ கியாங் நங்பாவின் நினைவஞ்சலி தினம்
31 டிசம்பர் வருடத்தின் கடைசி நாள்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR