சனி வக்ரி 2022 ராசி பலன்: சனி பகவான் என்றாலே பலருக்கு கதி கலங்கும். இவரது தாக்கம் மற்ற கிரகங்களின் தாக்கத்தை விட எப்போதும் அதிகமாகவே இருக்கும். பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அழிவை உருவாக்க சனியின் நேரடி இயக்கமே போதுமானது.
ஜூன் 5 முதல், சனி பகவானின் தலைகீழ் நகர்வு துவங்கும். இந்த இயக்கத்தால் சனி தோஷம் மற்றும் சனியின் மகாதசையால் பாதிக்கப்பட்டவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் சனி பகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். அவர் ஏப்ரல் 29 ஆம் தேதி தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைந்தார். இப்போது ஜூன் 5 முதல் அடுத்த 141 நாட்களுக்கு, சனி பிற்போக்கு இயக்கத்தில் இருப்பார். அதன் பிறகு அக்டோபர் 23-ம் தேதி முதல் சனி மீண்டும் மாறுவார்.
சனி வக்கிரத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை ஏற்படும்
வக்ர சனி, அதாவது சனி பகவானின் பிற்போக்கு நகர்வு ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் தாக்கத்தில் உள்ளவர்களை அதிகம் பாதிக்கும். எனினும், ஒரு நபர் நல்ல செயல்களைச் செய்தால், அவர் இந்த பக்க விளைவுகளிலிருந்து விடுபடலாம். சனியை மகிழ்விக்க, ஏழை, எளியோருக்கு உதவுவது மிக நல்ல பலன்களை அளிக்கும்.
மேஷம்:
பிற்போக்கு நகர்வை கொண்ட சனி பகவான் மேஷ ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களைத் தரும். மேஷ ராசிக்காரர்களுக்கு பண இழப்பு நேரிடலாம், எனவே பரிவர்த்தனைகளை கவனமாக செய்யுங்கள். இது தவிர, திருமண வாழ்க்கையில் நீங்கள் மன அழுத்தம் மற்றும் பிற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி 2022: மேஷத்தில் பெயர்ச்சி; யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு சனி தசை நடக்கிறது. இந்த சூழ்நிலையில், வக்ர சனி அவர்களுக்கு அதிக சிக்கல்களை ஏற்படுத்தும். சனியின் தீய பார்வை அவர்களின் வேலையை கெடுத்துவிடும். விபத்து, காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது நல்லது. பண விஷயத்திலும் மிகவும் கவனமாக இருக்கவும்.
மகரம்:
மகர ராசிக்காரர்கள் தற்போது ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ளனர். ஜூன் 5க்கு பிறகு சனி வக்கிரம் தொடங்கியவுடன் இவர்களது பிரச்சனைகள் அதிகரிக்கலாம். இது தொழில், வேலை உறவுகளில் மோசமான விளைவை ஏற்படுத்தும். மக்களிடம் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பம், பணியிடம் என அனைத்து இடங்களிலும் அமைதியாக இருங்கள். தேவையற்ற சிக்கல்களில் சிக்கிக்கொள்ளும் சாத்தியக்கூறுகள் தற்போது அதிகம் உள்ளன. ஆகையால் மிக கவனமாக இருப்பது நல்லது.
கும்பம்:
இந்த நேரத்தில் சனி கும்ப ராசியில் இருக்கிறார். மேலும், அவர் இதே ராசியில் வக்ரமாவார். ஆகையால் இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவான் மோசமான விளைவுகளௌ ஏற்படுத்துவார்.
ஆகையால் கும்ப ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத சர்ச்சைகளில் இருந்து விலகி இருங்கள். முதலீடு செய்யும் போது கவனமாக இருங்கள். திருமணம் செய்ய விரும்பும் கும்ப ராசிக்காரர்களுக்கு சிறு தடைகள் ஏற்படலாம். திருமணமான தம்பதிகள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆகையால், உறவுகளுக்கு இடையே மிகவும் பொறுமையாக இருப்பது மிக அவசியமாகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR