Bank Holidays in October: வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி. அக்டோபர் 2021 இல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வங்கிகள் 21 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளின் விடுமுறை நாட்களும் இதில் அடங்கும்.
அக்டோபர் (October) மாதத்தில், காந்தி ஜெயந்தி, வால்மீகி ஜெயந்தி, நவராத்திரி, தசரா, ஈத்-இ-மிலத் போன்ற பல முக்கிய நாட்களும் விழாக்களும் உள்ளன. இந்த சந்தர்பங்களில் வங்கிகளுக்கு விடுமுறை இருக்கும்.
அக்டோபர் மாதத்தில் நாட்டின் அனைத்து இடங்களிலும் வங்கிகள் (Banks) 21 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்றில்லை. சில விடுமுறைகளில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். சில விடுமுறைகள்/பண்டிகைகள் குறிப்பிட்ட மாநிலம் அல்லது பிராந்தியத்துடன் தொடர்புடையவை. ஆகையால், வங்கிகளின் விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடலாம்.
ALSO READ: Warning! வங்கிகளின் இன்று முதல் மாறுதல்கள்; என்னென்ன மாற்றங்கள்? இதோ...
நீங்கள் தெரிந்து கொள் வேண்டிய முக்கிய தகவல்கள்
வங்கி விடுமுறைகள் குறித்து வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இதன்மூலம் உங்கள் வேலை தாமதிக்கப்படாமல் தடை படாமல் நடக்கும். ஏடிஎம்கள் மற்றும் பண வைப்பு இயந்திரங்கள் வங்கி விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து செயல்படும். ஆகையால் மக்கள் பணத்தை டெபாசிட் செய்வதிலோ அல்லது திரும்பப் பெறுவதிலோ எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ள மாட்டார்கள். ரிசர்வ் வங்கியின் காலண்டரின் படி, அக்டோபர் 2021 இல், வார இறுதி நாட்கள் தவிர, வங்கிகளுக்கு 16 விடுமுறை நாட்கள் உள்ளன.
அக்டோபர் 2021 இல் வங்கி விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியல்
அக்டோபர் 1, 2021 - அரை வருட வங்கி கணக்கு செயல்முறை நாள் (சிக்கிம்)
2 அக்டோபர் 2021 - காந்தி ஜெயந்தி
3 அக்டோபர் 2021 - ஞாயிறுக்கிழமை
6 அக்டோபர் 2021 - மஹாளய அமாவாஸ்யே (மேற்கு வங்கம், திரிபுரா, கர்நாடகா)
7 அக்டோபர் 2021 - லன்னிங்தோ சன்மாஹி (திரிபுரா, மேற்கு வங்கம், மேகாலயா)
9 அக்டோபர் 2021 - இரண்டாவது சனிக்கிழமை
10 அக்டோபர் 2021 - ஞாயிறுக்கிழமை
12 அக்டோபர் 2021 - துர்கா பூஜை (மகா சப்தமி) / (மேற்கு வங்கம், திரிபுரா)
13 அக்டோபர் 2021 - துர்கா பூஜை (மகா அஷ்டமி) / (மேற்கு வங்கம், சிக்கிம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மணிப்பூர், திரிபுரா, அசாம்)
14 அக்டோபர் 2021 - துர்கா பூஜை/தசரா/ஆயுத பூஜை (மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், திரிபுரா, தமிழ்நாடு, சிக்கிம், புதுச்சேரி, ஒடிசா, நாகாலாந்து, மேகாலயா, கேரளா, கர்நாடகா, ஜார்க்கண்ட், பீகார், அசாம்)
15 அக்டோபர் 2021 - துர்கா பூஜை/தசரா/தசரா (விஜய தசமி)/(மணிப்பூர், இமாச்சல பிரதேசம் தவிர தேசிய விடுமுறை)
16 அக்டோபர் 2021 - துர்கா பூஜை (தாசைன்) / (சிக்கிம்)
17 அக்டோபர் 2021 - ஞாயிறுக்கிழமை
18 அக்டோபர் 2021 - கதி பிஹு (அசாம்)
19 அக்டோபர் 2021-ஈத்-இ-மிலாத்/ஈத்-இ-மிலாடி நபி/மீலாத்-இ-ஷெரீப்/பரவாபத் (குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரகாண்ட், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ஜம்மு, காஷ்மீர், உத்தரப் பிரதேசம், கேரளா, டெல்லி, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட்)
20 அக்டோபர் 2021-மகரிஷி வால்மீகி பிறந்த நாள்/லக்ஷ்மி பூஜை/ஈத்-இ-மிலத் (திரிபுரா, பஞ்சாப், மேற்கு வங்கம், கர்நாடகா, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம்)
22 அக்டோபர் 2021-ஈத்-இ-மீலாத்-உல்-நபிக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (ஜம்மு-காஷ்மீர்)
23 அக்டோபர் 2021 - நான்காவது சனிக்கிழமை
24 அக்டோபர் 2021 - ஞாயிறுக்கிழமை
ALSO READ: Post Office: ATM கார்டு, பரிவர்த்தனை தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றம்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR