பழைய ஓய்வூதியத் திட்டம், சமீபத்திய புதுப்பிப்பு: சமீபகாலமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாடு முழுவதும் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பல மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி விட்டன. சமீபத்தில் மத்திய அரசு, ஊழியர்களின் பழைய ஓய்வூதியம் இனி புதிய பார்முலாவுடன் அமல்படுத்தப்படும் என்று கூறியது. இது ஊழியர்களுக்கு சிறிய நிவாரணத்தை அளித்தது. பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுப்பது தொடர்பான அரசாங்கத்தின் கருத்துக்கள் மற்றும் ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
பழைய ஓய்வூதியத்தை மீண்டும் வழங்குவது குறித்து பல மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பல மாநிலங்களில் ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பழைய ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து தற்போது பல செய்திகள் வெளியாகி வருகின்றன. பீகார் ஊழியர்களும் பழைய ஓய்வூதியத்தை மறுசீரமைப்பது தொடர்பாக கருப்பு தினம் அனுசரித்து வருகின்றனர்.
சமீபகாலமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். நாட்டின் பல மாநிலங்களில் உள்ள அதிகாரிகளிடம் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பல வகையான தகவல்கள் பெறப்படுகின்றன. மேலும் இத்திட்டத்தின் கோரிக்கையை நிறைவேற்ற ஊழியர்கள் ஒருங்கிணைந்து முயற்சி செய்து வருகின்றனர். இந்த செவ்வாய்கிழமையன்று, அனைத்து ஆசிரியர் பணியாளர்கள் நலச் சங்கத்தின் கீழ், பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அனைத்து கோரிக்கைகள் குறித்தும் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இருந்து கேசரி தேவி படேலிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தர்பங்கா ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவார்கள்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வெண்டும் என வலியுறுத்தி தர்பங்கா ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவார்கள். பீகார் அமைப்பின் உருவாக்கத்தில், மாவட்டத்தில் புதிய ஓய்வூதியம் பெறும் ஊழியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் தேசிய அளவில் போராட்டம் நடத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் பணியை செய்வார்கள் என்பது சமீபத்திய செய்தியின் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ரயில்வே ஜாக்பாட் அறிவிப்பு.. இனி என்ஜாய்மெண்ட் தான்
எம்.பி.யிடம் பழைய ஓய்வூதியத் திட்ட மறுசீரமைப்பு மனு அளிக்கப்பட்டது
அனைத்து ஆசிரியர் பணியாளர்கள் நலச் சங்கத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் எம்.பி.க்கு ஒரு குறிப்பாணை சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் மனுவில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு கடிதங்கள்
தற்போது வரும் புதிய அப்டேட் மூலம் ஊழியர்கள், அலுவலர்கள், ஆசிரியர்களின் பிரச்னைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம் என எம்.பி., கூறியதாக தெரிய வந்துள்ளது. இந்த கோரிக்கை தொடர்பாக பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுதவிர, நாட்டில் உள்ள சுமார் 80 லட்சம் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசியல் சாசன உரிமையை மத்திய அரசு வழங்க வேண்டும் என அந்த அமைப்பின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம்
தமிழ்நாட்டிலும் அதே நிலைதான் உள்ளது. தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old Pension Scheme) கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து மாநில அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். முன்னதாக ஆளும் திமுக கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தில், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பலன்கள் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்து சுமார் மூன்று ஆண்டுகள் ஆகியும் பழைய ஓய்வூதிய திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஓய்வூதியத் திட்டத்தில் பல குறைகள் இருப்பதாகவும், இது ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை என்றும் கூறப்படுகின்றது.
மேலும் படிக்க | அடிச்சது ஜாக்பாட்.. முதலீடு செய்யாமலே மாதந்தோறும் ரூ.3000 ஓய்வூதியம் கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ