மெர்சிடிஸ்-பென்ஸ் CEO ஓய்வு நாளுக்கு BMW வெளியிட்ட வீடியோ இணையத்தில் விரலாக பரவி வருகிறது!!
கார் தயாரிப்புகளில் இரு வேறு துருவங்களாக இருப்பவை BMW மற்றும் Mercedes-Benz. கார்களில் புதுபுது தொழிற்நுட்பத்தை அறிமுகம் செய்வதில் BMW மற்றும் Mercedes-Benz நிறுவனங்ககளை அடித்துக்கொள்ள வேறு எந்த நிறுவனமும் கிடையாது. Mercedes-Benz நிறுவனத்தின் CEO தியேத்தர் ஜெத்ச்சே (Dieter Zetsche) சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதற்காக வீடியோ ஒன்றை வெளியிட்டது BMW. அந்த வீடியோவிற்காக ஜெத்ச்சே போன்ற உருவ ஒற்றுமை உள்ள ஒருவரை BMW நடிக்க வைத்துள்ளனர்.
Mercedes-Benz CEO-விற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அமைந்த இந்த வீடியோவில் இறுதியில் ஒரு ட்விஸ்டை வைத்துள்ளது BMW. அந்த வீடியோவில் தனது ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து ஓய்வு பெறும் ஜெத்ச்சே, தன் வீட்டிற்கு Mercedes-Benz S கிளாஸ் காரில் செல்கிறார். வீட்டிற்கு சென்ற பின் தனது பார்க்கிங் ஏரியாவில் இருந்து மெட்டாலிக் ஆரஞ்ச் BMW i8 ரோட்ச்தர் காரில் செல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோ பதிவு இதோ:
Retirement is when you can leave your past behind and embrace your future. #BMW #Mercedes #Zetschehttps://t.co/S0njE4CNfp pic.twitter.com/wK1sLm2gS8
— BMW (@BMW) May 22, 2019
அந்த வீடியோவின் கடைசியில், ‘பல ஆண்டுகளாக ஆரோக்கியமான போட்டிக்கு நன்றி ஜெத்ச்சே' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட சில மணி நேரத்திலேயே பல ஆயிரக்கணக்கான நபர்கள் ஷேர் செய்துள்ளனர். இந்த வீடியோ இதுவரை 2.62 மில்லியன் பார்வையாளர்களையும், 28.762 விருப்பங்களையும் பெற்றுள்ளது. மேலும், BMW நிறுவனத்தின் திறமையை பலர் பாராட்டி வரகின்றனர். அந்த பதிவில் சில கீழே இணைக்கப்பட்டுள்ளது.
We guess our boss would rather rely on real horse power for his retirement ride. However, thanks for the tribute - and the competition. pic.twitter.com/vwn4ThMIqM
— Daimler AG (@Daimler) May 22, 2019
Whaohhh, Germans knw how to do stuff .
— Chamith Wijayaratne (@TheChamith) May 22, 2019
Great Sportsmanship BMW Respek!
— Mthuthuzeli Mpiti (@mtura712) May 22, 2019
congratulations Benz & BMW your competition each other most vaulable things add automobil industry
— Kamil Caner CAKIR (@KCC45521638) May 22, 2019