நிர்வாணமாக திருமணம் செய்து கொண்ட விசித்திர ஜோடி -SeePic..!

இத்தாலியில் இளம் தம்பதியினர் நிர்வாணமாக தங்களின் திருமணத்தை நடத்தியுள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 24, 2018, 12:51 PM IST
நிர்வாணமாக திருமணம் செய்து கொண்ட விசித்திர ஜோடி -SeePic..!  title=

இத்தாலியில் இளம் தம்பதியினர் நிர்வாணமாக தங்களின் திருமணத்தை நடத்தியுள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது...! 

"திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்" என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ் உறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது. 

திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்றும் கூறலாம். தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர். இது போன்று ஒரு இளம் ஜோடிகள் தைகளின் திருமணத்தை விசித்திரமாக செய்து கொண்டுள்ளனர்.  

இத்தாலி நாட்டைச் சேர்ந்த காதல் ஜோடியான வேலன்டின் மற்றும் ஆன்கா ஆர்சன் ஆகியோர் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.  

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இயற்கை மிகவும் பிடிக்கும் என்பதால் இவர்கள் நிர்வாணமாக திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர். இதையடுத்து இவர்கள் இத்தாலியில் உள்ள தீவில் நிர்வாணமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு அவர்களது நெருங்கிய நண்பர்கள் 2 பேர் மற்றும் பதிவாளர் ஆகியோர் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். 

இது குறித்து மணப்பெண் ஆன்கா ஆர்சன் கூறுகையில், எங்களது இந்த நிர்வாண திருமண ஆசைக்கு பெற்றோர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதால் தான் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அழைக்காமல் 2 பேரை மட்டும் அழைத்தோம். மேலும் இந்த ஆண்டு இறுதியில் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அதற்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த இளம் ஜோடியின் விசித்திரமான திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றனர். மேலும், இவர்களுக்கு பலரும் திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்....! 

 

Trending News