IPTV சேவைகளை அறிமுகப்படுத்திய பின்னர், BSNL மீண்டும் இந்தியாவில் புதிய சேவைகளை தொடங்குவதாக அறிவித்துள்ளது.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், IPTV சேவைகளை அறிமுகப்படுத்திய பின்னர், BSNL மீண்டும் இந்தியாவில் புதிய சேவைகளை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய சேவைகளின் கீழ், BSNL அதன் லேண்ட்லைன் பயனர்களுக்கு மைக்ரேஷன் சேவைகளை வழங்குகிறது. புதிதாக தொடங்கப்பட்ட சேவையின் மூலம் பயனர்கள் தங்களின் தற்போதைய எண்களைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கின்றன.
பயனர்கள் பாரத் ஃபைபரின் வாய்ஸ் சேவையிலிருந்து பாரத் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு மாற்றிக்கொள்ள முடியும் என்று ஆபரேட்டர் தெரிவித்துள்ளது. இந்த சேவைகள் (பாரத் ஃபைபருக்கு லேண்ட்லைன்) நாட்டில் அதிக தரவை வழங்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உண்மையில், வாடிக்கையாளர்களும் மாற்றங்களை கோருவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
BSNL லேண்ட்லைன் மற்றும் பாரத் ஃபைபர் சேவைகள்:
அடுத்த தலைமுறை நெட்வொர்க்கை (NGN) தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு இந்த சேவைகள் கிடைக்கின்றன. ஒரு வாடிக்கையாளர் புதிய சேவைகளுக்கு மாறினால் வைப்புதொகையிலிருந்து தானாகவே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஆபரேட்டர் தெரிவித்துள்ளது. தெரியாதவர்களுக்கு, தரவு, அழைப்பு மற்றும் மல்டிமீடியா உள்ளிட்ட அனைத்து தரவு போக்குவரத்தையும் NGN மாற்றம் கையாள முடியும். இருப்பினும், NGN சுவிட்சில் இல்லாத வாடிக்கையாளர்கள் சேவைகளை நிறுத்த ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும், பின்னர் இணைப்புக்கான ஆர்டரை தாக்கல் செய்ய வேண்டும்.
ALSO READ | Jio ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தின் வேகம் 1 Mbps ஆக குறைப்பு!
சேவைகளைப் பெற, பயனர்கள் பாரத் ஃபைபர் திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த திட்டங்கள் கோவா, அந்தமான் & நிக்கோபார், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் மற்றும் பல நகரங்களில் கிடைக்கின்றன. இந்த திட்டங்கள் ஒரு மாதம், 12 மாதங்கள், 24 மாதங்கள் மற்றும் 36 மாதங்களுக்கு செல்லுபடியாகும்.
பாரத் ஃபைபர் சேவைகளை பெறுவது எப்படி?
படி 1: முதலில், நீங்கள் ஆபரேட்டரின் வலைத்தளத்தைப் பார்க்க வேண்டும், பின்னர் நீங்கள் நிறுவனத்தின் ஃபைபர் பேனரைக் கிளிக் செய்ய வேண்டும்.
படி 2: அதன் பிறகு, நீங்கள் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் ID, லேண்ட்லைன் எண் மற்றும் STD குறியீடு போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். இது முடிந்ததும், பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டம், மாவட்டம், வீட்டு எண் மற்றும் PIN குறியீட்டை எழுத வேண்டும்.
படி 3: பின்னர், நிறுவனம் உங்கள் விவரங்களை சரிபார்த்து, அடுத்த இரண்டு நாட்களில் (அதாவது 48 மணிநேரம்) உங்கள் சேவைகளைப் பூர்த்திச் செய்யும்.