அமெரிக்க சிப்பாயால் கொள்ளையடிக்கப்பட்ட சர்வாதிகாரி ஹிட்லரின் கழிப்பறை இருக்கை ஏலத்தில் விடப்படுகிறது. கழிப்பறை சீட்டின் விலை என்னவாக இருக்கும் என்று உங்களால் எளிதாக கணித்துவிட முடியும். ஆனால், ஹிட்லர் பயன்படுத்திய கழிவறை என்பதால் இதற்கு மவுசு அதிகம். இதன் விலை ஏலத்தில் எவ்வளவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது தெரியுமா?
நாஜி சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லரின் தனிப்பட்ட குளியலறையிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒரு கழிப்பறை இருக்கை தற்போது ஒரு அமெரிக்க சிப்பாயின் குடும்பத்தால் ஏலம் விடப்படுகிறது, அவர் அதை ஹிட்லரின் தோல்வியுற்ற திட்டங்களின் நையாண்டி கலந்த நினைவூட்டலாக எடுத்துக்க் கொள்ளப்படுகிறது.
பெர்ச்டெஸ்கடன் (Berchtesgaden) நகரில் உள்ள ஹிட்லரின் பெர்கோஃப் (Berghof) இல்லத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கழிப்பறை இருக்கை சுமார் $ 15,000 அதாவது கிட்டத்தட்ட 11 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஏலத்தின் தொடக்கவில்லை $ 5,000 அதாவது சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Also Read | Ice பயன்படுத்தி 24 மணி நேரத்தில் 2 km நெடுஞ்சாலையை உருவாக்கி இந்தியா 4 உலக சாதனை
பிரெஞ்சு படையின் 2 வது கவசப் பிரிவுடன் தொடர்பு கொண்டிருந்த ராக்ன்வால்ட் சி போர்ச் (Ragnvald C Borch) என்ற அமெரிக்க சிப்பாயின் குடும்பத்தினரால் இந்த கழிப்பறை இருக்கை ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 1945ஆம் ஆண்டு மே மாதத்தில் ஹிட்லர் இருந்த வீட்டிற்கு சென்ற நேச நாட்டு துருப்புக்களில் ஒருவராக பணிபுரிந்தவர் ராக்ன்வால்ட் சி போர்ச் (Ragnvald C Borch) என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த கழிப்பறை இருக்கை மற்றும் இரண்டு ஓவியங்கள் (oil paintings) மற்றும் முதலாம் உலகப் போரின் கவச உடையையும் ஹிட்லரின் வீட்டில் இருந்து தனது பங்காக எடுத்துக் கொண்டார் போர்ச். ஹிட்லர் இறந்த பின்னர் அவரது படைகள் சரணடைந்தபோது, நேசப் படைகளை சேர்ந்த சிப்பாய்கள் சர்வாதிகாரியின் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து பங்கிட்டுக் கொண்டனர்.
நாஜி தலைவரின் குடியிருப்பு குண்டுவெடிப்பால் பெரிதும் சேதமடைந்தது மற்றும் தீப்பிடித்தது என்றாலும், சில பொருட்கள் அந்த நிலையிலும் சூறையாடப்பட்டன.
இதுபோன்ற வித்தியாசமான நினைவுச்சின்னங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்று போர்ச்சின் வாரிசுகள் கூறுகின்றனர்.
Also Read | Fact Check: காதலர் தினத்திற்காக தாஜ் ஹோட்டல் சலுகை தருவது உண்மையா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR