சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சாப்பிடுவதால் வரும் ஆபத்துகளும், பக்கவிளைவுகளும்..!

Sugar-Free Tablets: சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சாப்பிட்டால் உடலில் உள்ள குடல் மூலம் நடைபெறும் செரிமான அமைப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டு, ஒருவருக்கு பசியை உணர்த்து உணர்திறனே இல்லாமல்கூட போக வாய்ப்பு இருக்கிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 20, 2024, 05:01 PM IST
  • சுகர் ஃப்ரீ மாத்திரைகள் கலோரிகள் குறைவுதான்
  • சர்க்கரைக்கு பதிலாக சாப்பிட்டால் பக்கவிளைவுகள் உண்டு
  • இதயநோய், நீரிழிவு நோய், தலைவலி ஆகியவை வரும்
சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சாப்பிடுவதால் வரும் ஆபத்துகளும், பக்கவிளைவுகளும்..! title=

சர்க்கரையால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகளை தெரிந்து கொண்டிருக்கும் பலரும், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் வராமல் இருக்க உடற்பயிற்சியில் கவனம் செலுத்தும் அதேவேளையில் சர்க்கரை இல்லாத மாத்திரைகள் மற்றும் செயற்கை இனிப்புகளை எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். சுகர் ஃப்ரீ மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும்போது தங்கள் உடலில் இருக்கும் சர்க்கரை சமச்சீராகும், நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் என நினைக்கிறார்கள். ஆனால், சர்க்கரை இல்லாத மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும்போது அதன் பின்விளைவுகளை பற்றி யாரும் பெரிதாக யோசிப்பதில்லை.

உலகசுகாதார மையத்தின் கணக்கீடுபடி உலகம் முழுவதும் சுமார் 400 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்தியா போன்ற மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் இருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. உடலில் இன்சுலின் சமநிலையற்றதாக மாறும்போதே நீரிழிவு நோய் பிரச்சனை வருகிறது என தெரிவிக்கும் மருத்துவர்கள், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இயற்கையான அல்லது செயற்கையான இனிப்புகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | மழைக் காலத்தில் அடிக்கடி வயிற்றுப்போக்கு வருகிறதா... இந்த 5 நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள்!

எடையை குறைக்கும் முயற்சியை செய்பவர்கள் உடலில் உள்ள கலோரிகளைக் குறைக்க இயற்கை பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், சர்க்கரை சாப்பிடுவதால் பிரச்சனைகள் அதிகமாகும், அதனால் செயற்கை இனிப்புகளை எடுத்துக்கொள்ளலாம் என நினைத்தால் அதிலும் பின்விளைவுகள் இருக்கின்றன என்பது கனடாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கனடாவின் மனிடோபா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, செயற்கை இனிப்புகள் செரிமான அமைப்பு மற்றும் குடலில் உள்ள பாக்டீரியாக்களின் மீது எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன என்றும், இதன் காரணமாக ஒரு நபரின் பசியை உணரும் பழக்கம் பாதிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சர்க்கரை பயன்படுத்தினால் பிரச்சனை வரும் என கருதி பலர் செயற்கை இனிப்பான்களுக்கு மாறியிருப்பதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. அதனை எடுத்துக்கொள்பவர்கள் உடல் எடை அதிகரிப்பதும், இதயம் சார்ந்த பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதும் தெரியவந்திருக்கிறது. செயற்கை இனிப்புகளில் கலோரிகள் குறைவாக இருக்கலாம், ஆனால் ஆரோக்கியத்திற்கு பல பக்கவிளைவுகளை உண்டாக்குபவை. கல்லீரலும் பாதிக்கப்படும். 

சர்க்கரையை காட்டிலும் குறைவான கலோரி இருக்கிறது என செயற்கை இனிப்புகளை எடுத்துக்கொள்பவர்கள் பசியின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை காலப்போக்கில் எதிர்கொள்கின்றனர். ஒருநாளைக்கு இரண்டு முறைக்கு மேல் இதனை எடுத்துக் கொள்ளும்பட்சத்தில் உயர் ரத்த அழுத்தம், இதய பிரச்சினைகள் மற்றும் கரோனரி இதய நோய் போன்ற நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. மேலும், செயற்கை இனிப்புபகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும்போது ஒவ்வாமை, தலைவலி, குமட்டல், மூட்டுவலி, தூக்கமின்மை, நரம்புத் தளர்ச்சி போன்றவை படிப்படியாக வரலாம். எனவே உங்கள் டையட்டில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யும் முன்பு உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | பிறந்த குழந்தைக்கு எப்போது மொட்டையடிக்க வேண்டும்? சரியான நேரத்தை தெரிந்து கொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News