கொரோனா வைரஸ் பூட்டுதலுக்கு மத்தியில் நாய்க்குட்டிகளுக்கான தேவை இங்கிலாந்தில் அதிகரித்துள்ளது. காரணம் என்ன தெரியுமா?
கொரோனா முழு அடைப்பு தான் இதற்கு காரணம். உண்மையில் இங்கிலாந்தில் உள்ளவர்கள், குடும்பம் மற்றும் குழந்தைகளின் பொழுதுபோக்குக்காக நாய்களை வாங்க விரும்புகிறார்கள்.
சமூக விலகல் இல்லாத இடங்களில் துணியால் செய்யப்பட்ட முகமூடிகள் பயன்படுத்தக்கூடாது: WHO...
'கென்னல் கிளப்' அமைப்பின் அறிக்கையின்படி, நாய்களைப் பற்றிய தகவல்களை சேகரப்பவரின் எண்ணிக்கை நாட்டில் 180 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், பல வல்லுநர்கள் இந்த நாய்கள் / நாய்க்குட்டிகள் மீமான ஆர்வம், சமூக நடவடிக்கைகள் தொடங்கிய பின் முடிவடையக்கூடும் என்று நம்புகிறார்கள், மேலும் வரவிருக்கும் பொறுப்பின் தீவிரத்தையும் மக்கள் புரிந்துகொள்வார்கள் எனவும் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
பல வளர்ப்பாளர்கள் நாய்குட்டியின் எதிர்காலத்தை எண்ணி அஞ்சுகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பல குடும்பங்கள் பூட்டுதலின் போது தங்களையும் தங்கள் குழந்தைகளையும் மகிழ்விக்க நாய்களை வாங்கியுள்ளன. இருப்பினும், ஒரு நாயை வளர்ப்பதற்கு எடுக்கும் முயற்சிகள் மற்றும் பணத்தைப் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. காலத்தின் போக்கு அவர்கள் முயற்சியை முறியடித்துவிடும் என்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தகவல்களின்படி, இங்கிலாந்தில் நாய்களை வாங்குவதற்கான திடீர் கோரிக்கையை கருத்தில் கொண்டு, வளர்ப்பவர்கள் ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளனர். ஆர்வமுள்ள வாங்குபவர்களின் முழு பின்னணி பரிசோதனையையும் இந்த குழு செய்துள்ளது. அதாவது நாய் வாங்குவதற்கான வாங்குபவரின் திட்டத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தால், வளர்ப்பவர் அந்த கோரிக்கையினை நிராகரிக்கிறார்.
தென் கொரியாவுடனான அனைத்து ஹாட்லைன்களையும் துண்டிக்கும் வட கொரியா!...
நாட்டில் நாய்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், மீட்பு மையத்தில் நாய்களின் பற்றாக்குறை இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. நாய்கள் குறித்து எழும் தேடல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று நாய்கள் காப்பகத்தை நடத்தி வரும் பிடல்காம்ப் கூறுகிறார்.