எத்தியோப்பியவை சேர்ந்த மலநலம் பாதிக்கப்பட்ட மனிதனின் வயிற்றில் இருந்து 122 ஆணிகளை அகற்றிய மருத்துப்வர்கள்....
எத்தியோப்பியா நாட்டில் மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவரின் வயிற்ருப்பகுதியில் இருந்து சுமார் 122 ஆணிகளை நீக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இவர் வயிற்றில் பிரச்சனையாழ் மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர். அப்போது, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவருக்கு கிடைத்த அதிர்ச்சி என்ன என்றால் அவரும் வயிற்றுக்குள் சுமார் நூறுக்கும் மேற்பட்ட ஆணிகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து, அறுவை கிச்சை மூலம் மருத்துவர்கள் வரின் வயிற்றில் இருந்து ஆணிகளை அகற்றியுள்ளார். இதுகுறித்து செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் தாவித் தியாரே கூறியபோது, மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். மனநலம் பாதிப்பு தொடர்பான மருந்துகளை அவர் கடந்த 2 ஆண்டுகளாக உட்கொள்ளவில்லை. இந்த காலத்தில் அவர் ஆணிகளை விழுங்கியுள்ளார். உடைந்த கண்ணாடி துண்டுகளையும் அவர் விட்டுவைக்கவில்லை.
மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபர் எதையேனும் விழுங்கியிருக்கக் கூடும் என்று நினைத்தேன். வயிற்றில் அறுவை சிகிச்சை செய்ததில் 122 ஆணிகளை எடுத்துள்ளோம். அவை ஒவ்வொன்றும் 10 சென்டி மீட்டர் நீளம் கொண்டதாக இருந்தன. அதிர்ஷ்டவசமாக ஆணிகள் எவையும் அவரது வயிற்றை கிழிக்கவில்லை. ஒருவேளை அப்படி நடந்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும்; உயிர்கூட பிரிந்திருக்கலாம். அவர் இப்போது குணமடைந்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.