Driving Licence அப்ளை செய்ய வேண்டுமா? RTO அலுவலகம் கூட செல்லாமல் வேலை நடக்கும்

மக்கள் தங்கள் வீடுகளில் இருந்த படியே பல சேவைகளை இப்போது பெற்றுக்கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசாங்கம் செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 5, 2021, 12:23 PM IST
  • 18 சேவைகளுக்கு ஆதார் அங்கீகாரம் தேவையாக இருக்கும்.
  • இனி விண்ணப்பதாரர்கள் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்காது.
  • ஆர்டிஓ அலுவலகங்களின் செயல்திறன் மேலும் அதிகரிக்கும்.
Driving Licence அப்ளை செய்ய வேண்டுமா? RTO அலுவலகம் கூட செல்லாமல் வேலை நடக்கும் title=

Driving Licence Latest: இந்திய அரசாங்கம், 18 சேவைகளுக்கு ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தை அறிவித்துள்ளது. வாகன ஓட்டுநர்களின் கற்பவர் உரிமம் அதாவது லர்னர்ஸ் லைசன்ஸ், உரிமம் புதுப்பித்தல், நகல் உரிமம் உள்ளிட்ட 18 சேவைகள் இதில் அடங்கும். இதனால் இனி விண்ணப்பதாரர்கள் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்காது. இது மக்கள் மீதான இணக்கச் சுமையைக் குறைக்கும்.

மேலும் இந்த சேவைகளை தொந்தரவில்லாமல், குறைந்த அளவிலான தொடர்புகளுடன் பெற்றுக்கொள்ள இது உதவியாக இருக்கும். இது ஆர்டிஓ அலுவலகத்தில் (RTO Office) உண்டாகும் மக்கள் கூட்டத்தையும் குறைக்கும். இதனால் ஆர்டிஓ அலுவலகங்களின் செயல்திறன் மேலும் அதிகரிக்கும்.

மக்கள் தங்கள் வீடுகளில் இருந்த படியே பல சேவைகளை இப்போது பெற்றுக்கொள்ளலாம்.

இவற்றில் பின்வரும் சேவைகளும் அடங்கும்: லர்னர்ஸ் லைசன்ஸ், ஓட்டுவதற்கான திறனுக்கான சோதனை தேவையில்லாத ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல், நகல் ஓட்டுநர் உரிமம் (Driving Licence), ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் மற்றும் பதிவு சான்றிதழ், சர்வதேச ஓட்டுநர் அனுமதி வழங்கல், உரிமத்திலிருந்து கிளாஸ் ஆஃப் வெஹிகிளை சமர்ப்பித்தல், மோட்டார் வாகனத்தை தற்காலிகமாக பதிவு செய்வதற்கான விண்ணப்பம், முழுமையான கட்டமைப்புடனான மோட்டார் வாகனத்தை பதிவு செய்வதற்கான விண்ணப்பம்.

ALSO READ: Driving License: இங்கு பயிற்சி பெற்றால் ‘டெஸ்ட்’ இல்லாமல் ஓட்டுநர் உரிமம் கிடைக்கும்

ஆதார் அங்கீகாரம் தேவையாக இருக்கும் 18 சேவைகள்:

1. லர்னர்ஸ் லைசன்ஸ்

2. ஓட்டுவதற்கான திறனுக்கான சோதனை (Driving Test) தேவையில்லாத ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல்

3. நகல் ஓட்டுநர் உரிமம்

4. ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் மற்றும் பதிவு சான்றிதழ்

5. சர்வதேச ஓட்டுநர் அனுமதி வழங்கல்

6. உரிமத்திலிருந்து கிளாஸ் ஆஃப் வெஹிகிளை சமர்ப்பித்தல்

7. மோட்டார் வாகனத்தை தற்காலிகமாக பதிவு செய்வதற்கான விண்ணப்பம்

8. முழுமையான கட்டமைப்புடனான மோட்டார் வாகனத்தை பதிவு செய்வதற்கான விண்ணப்பம்

9. பதிவு சான்றிதழ் வழங்குவதற்கான விண்ணப்பம்

10. பதிவு சான்றிதழ் பெற என்ஓசி வழங்குவதற்கான விண்ணப்பம்

11. மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கான அறிவிப்பு

12. மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கான விண்ணப்பம்

13. பதிவு சான்றிதழில் முகவரி மாற்றத்தின் தகவல்

14. அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையத்திலிருந்து ஓட்டுநர் பயிற்சிக்கான பதிவுக்கான விண்ணப்பம்

15. தூதாண்மை அதிகாரியின் மோட்டார் வாகனத்தை பதிவு செய்வதற்கான விண்ணப்பம்

16. தூதாண்மை அதிகாரியின் மோட்டார் வாகனத்தின் புதிய பதிவு அடையாளத்தை வழங்குவதற்கான விண்ணப்பம்

17. வாடகை-கொள்முதல் ஒப்பந்தத்தின் ஒப்புதல்

18. வாடகை-கொள்முதல் ஒப்பந்தத்தின் முடிவு

ALSO READ: இனி லேசான பார்வை குறைபாடு உள்ளவர்களும் ஓட்டுநர் உரிமம் பெறலாம்..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News