வருமானம் அதிகம் கொடுப்பதோடு பாதுகாப்பையும் கொடுக்கும் இடத்தில் முதலீடு செய்யவேஅனைவரும் விரும்புவார்கள். பாதுகாப்பான முதலீடு என்றால்நம் மனதில் தோன்றுவது, சிறந்த வங்கிகள் மற்றும் அஞ்சலக முதலீடுகள். வங்கி FD கணக்கை விட, தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி கிடைப்பதால், அதில் உங்கள் பணத்தை முதலீடு செய்யலாம். கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தைத் தவிர, இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வது அரசாங்க பாதுகாப்பு மற்றும் வரி விலக்கு சலுகைகளையும் வழங்குகிறது. இந்திய அஞ்சல் துறையின் இந்தத் திட்டங்கள் தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
தற்போது வாடிக்கையாளர்களுக்கு 9 அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இந்த 9 சிறு சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் (SSY), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC), தபால் அலுவலக டெர்ம் டெபாஸிட் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) ஆகியவை அடங்கும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்தத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் நிர்ணயிக்கிறது. இந்த திட்டங்களில் பல FD வட்டி விகிதத்தை விட அதிக வருமானத்தைப் கொடுக்கின்றன. அதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
அதிக வட்டி தரும் சிறு சேமிப்பு திட்டங்கள்
சுகன்யா சம்ரித்தி யோஜனா என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் (SSY) மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஆகியவை 8% க்கும் அதிகமான வட்டி விகிதத்தை வழங்குகின்றன.
சுகன்யா சம்ரித்தி யோஜனா
SSY என்பது இந்திய அரசின் ஆதரவுடன் கூடிய சிறு சேமிப்புத் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
60 வயதுக்கு மேற்பட்ட எவரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து அதிக வட்டி விகிதத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் இந்த திட்டத்திற்கு 8.2% வட்டி விகிதத்தை வழங்குகின்றன.
மேலும் படிக்க | 7th pay commission: அடி தூள்... 50% டிஏ, அடிப்படை ஊதியத்தில் எக்கச்சக்க ஏற்றம்
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC)
தற்போது NSC 7.7% வட்டி விகிதத்தை வழங்குகிறது. NSC இல் மேல் முதலீட்டு வரம்பு இல்லை மற்றும் குறைந்தபட்ச முதலீடு ₹100 ஆகும். ஒரு நிதியாண்டில் என்எஸ்சியில் ரூ. 1.50 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு பிரிவு 80சியின் கீழ் வரி விலக்கு பலன் கிடைக்கும்.
தபால் அலுவலக டெர்ம் டெபாஸிட் திட்டம்
வங்கி FDகளைப் போலவே, அஞ்சல் அலுவலகமும் ஒரு வருடம், இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு நிலையான வைப்புகளுக்கு சிறந்த வட்டியை வழங்குகிறது. 5 ஆண்டு கால அஞ்சலக வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்தால், ஒரு நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். தற்போது, 5 ஆண்டு அஞ்சல் அலுவலக வைப்புத் திட்டம் 7.5% வட்டி வழங்குகிறது.
வங்கிகளின் FDகள் மீதான வட்டி விகிதங்கள்
சாதாரண குடிமக்கள் எஸ்பிஐயின் FDயில் 3.00% முதல் 7.10% வரை வட்டி விகிதங்களைப் பெறுகிறார்கள்.
HDFC வங்கியின் FD (HDFC Bank FD) 3% முதல் 7.1% ஆண்டு வட்டி விகிதத்தை கொடுக்கிறது.
ஐசிஐசிஐ வங்கியின் FD 3% முதல் 7.1% வரை வட்டி விகிதத்தைப் கொடுக்கிறது.
Axis Bank FD முதலீட்டில் 3.5% முதல் 7.1% வரை வட்டி கிடைக்கும்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் FD (PNB FD) வட்டி விகிதம் 3.5% முதல் 7.25% வரை என்ற அளவில் வழங்கப்படுகிறது.
பாங்க் ஆஃப் பரோடாவின் FD (BoB FD) வட்டி விகிதம் 3% முதல் 7.25% வரை என்ற அளவில் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ