மழை காலங்களில் துவைத்த துணிகளை உலர்த்த 4 எளிய வழிகள்!

பருவமழை என்பது அழகானது தான், ஆனால் இந்த பருவ காலத்தில் துவைத்த துணிகளை உலர்த்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று!

Last Updated : Aug 25, 2019, 08:02 PM IST
  • மழை காலங்களில் துவைத்த துணிகளை எளிய வழியில் உளர்த்துவது எப்படி?
மழை காலங்களில் துவைத்த துணிகளை உலர்த்த 4 எளிய வழிகள்!

பருவமழை என்பது அழகானது தான், ஆனால் இந்த பருவ காலத்தில் துவைத்த துணிகளை உலர்த்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று!

விரும்பிய நேரத்தில் உங்களுக்கு விருப்பமான ஆடையை உடுத்துவது என்பது இந்த காலக்கட்டத்தில் ஏற்க முடியாத ஒன்றாகவே உருவாகிவிடும். இந்த சிக்கலில் இருந்து தப்பிப்பது எப்படி? மழை காலங்களில் துவைத்த துணிகளை எளிய வழியில் உளர்த்துவது எப்படி?... அதற்காகவே சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Dryer Use: நாம் பயன்படுத்தும் வாஷிங் மெஷிசன்களில் இருக்கும் ட்ரையர் எனப்படும் உளர்ப்பானை பயன்படுத்துவது நல்லது. உளர்ப்பான் வரம்புகள் பொதுவாக ஒரு நிமிடம், அதை நீட்டி, குறைந்தது மூன்று நிமிடங்கள் உலர வைக்கத்து துணிகளை காய வைப்பது நல்லது.

Hair Dryer: வீட்டில் வாசிங் மெஷின் இயந்திரம் இல்லை என்றால், ஒரு ஹேர்டிரையரின் உதவியை நாடலாம். நன்கு முறுக்கப்பட்ட ஈரத் துணிகளை ஒரு ஹேர்டிரையரை கொண்டு சூடுப்படுத்தவம். இது துணிகளின் ஈரப்பதத்தை குறைத்து விரைவாக உலர வைக்கவும்.

குளிரூட்டி: மழை காலத்தில் குளிரூட்டிகள் பயன்படுத்தப்படுவதில்லை, எனினும் இந்த சூழலில் அதன் தேவை முக்கியமான ஒன்றாக மாறும். ஆதாவது, குளிரூட்டியை ஓட்டி அதில் வரும் காற்றை கொண்டு துணிகளை உளர்த்துவது மிகவும் எளிது. ஈரத்துணிகளை ஒரு ஸ்டாண்டில் வைத்து அதற்கு முன்னதாக குளிரூட்டியை இயக்க  வேண்டும். இது துணிகளின் ஈரப்பதத்தை குறைத்து விரைவாக உலர வைக்கவும்.

Iron: துணிகள் அதிக ஈரமாக இல்லாவிட்டால் அயர்ன் செய்யுங்கள், இது ஈரப்பதத்தை விரைவாக அகற்றவும், ஒரே இரவில் விசிறி காற்றில் துணிகளை உலர வைக்கவும் உதவும்.

More Stories

Trending News