வைரல் வீடியோ! இளையராஜா பாடல் கேட்டு தூங்கும் யானை

தூக்கமின்றி தவித்த யானைக்கு இளையராஜாவின் பாட்டைப் பாடித் தூங்க வைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Last Updated : Oct 27, 2018, 10:53 AM IST
வைரல் வீடியோ! இளையராஜா பாடல் கேட்டு தூங்கும் யானை

தூக்கமின்றி தவித்த யானைக்கு இளையராஜாவின் பாட்டைப் பாடித் தூங்க வைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீகுமார் என்ற பாகன் யானை ஒன்றை வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக இந்த யானை தூக்கம் இல்லாமல் தவித்து வந்தது. 

யானையின் தூக்க மின்மையை போக்க யானைக்கு தாலாட்டாக ஒரு சினிமா பாடலை பாடியுள்ளார். அந்த பாடலில் மயங்கி யானை தூங்கி இருக்கிறது. இப்போது தினமும் அந்த பாடலை பாடியே தூங்க வைக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இசைஞானி இளையராஜா இசையில் மலையாளத்தில் மம்முட்டி நடித்து 1984ம் ஆண்டில் வெளிவந்த மங்களம் நேருன்னு என்ற படத்தில் வரும் 'அல்லியிளம் பூவே' என்ற பாடலைத்தான் பாகன் பாடுகிறார்.

More Stories

Trending News