டெல்லி, பஞ்சாப், தமிழ்நாடு, ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போதிய கருக்கலைப்பு மாத்திரைகள் (Abortion Drugs) இல்லாததால், இந்த COVID தொற்று காலத்தில் இவற்றிற்கான கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மருத்துவ கடை வைத்திருக்கும் சுமார் 1,500 கெமிஸ்டுகளிடம் (Chemists) இனப்பெருக்க சுகாதார சேவைகளுக்கான அறக்கட்டளை நடத்திய ஆய்வில், பஞ்சாபில் ஒரு சதவீத கெமிஸ்டுகள், தமிழ்நாடு மற்றும் ஹரியானாவில் இரண்டு சதவீதம், மத்திய பிரதேசத்தில் 6.5 சதவீதம் மற்றும் டெல்லியில் 34 சதவீதம் கெமிஸ்டுகளிடம் மட்டும்தான் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கான இருப்பு உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
ஆய்வின் படி, மருந்துகளை சேமித்து வைக்காதது, மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு அதிகாரிகள் விதிக்கும் அதிகப்படியான கட்டுப்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சுமார் 79 சதவீத மருந்து கடைக்காரர்கள், சட்ட சிக்கல்கள் மற்றும் அதிகப்படியான ஆவணத் தேவைகளைத் தவிர்ப்பதற்காக இந்த மருந்துகளை சேமிப்பதில்லை.
டெல்லியில் (Delhi) கிட்டத்தட்ட 34 சதவீத கெமிஸ்டுகள் கருக்கலைப்பு மருந்தை சேமித்து வைத்துள்ளனர். இந்த மருந்துகள் அத்தனை எளிதாகக் கிடைப்பதுமில்லை. இவற்றின் மீதுள்ள அதிகப்படியான கட்டுப்பாடு, கவலைக்கு ஒரு முக்கிய காரணமாகும். இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக லட்சக்கணக்கான பெண்கள் பாதுகாப்பான கருக்கலைப்பு முறைகளைப் பெற முடியாமல் போகலாம். எனினும், ஆய்வு நடத்தப்பட்ட மாநிலங்களில் சுமார் 10 சதவீத கெமிஸ்டுகள், இந்த மருந்துகள் கர்ப்பத்தின் பாலின-தேர்வு சார்ந்த முடிவுகளுக்கு பயன்படுத்தப்படலாம் என்றும் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் (Tamil Nadu) 2 சதவீத மருந்து கடைக்காரர்களிடம் மட்டுமே கருக்கலைப்பு மாத்திரைகள் உள்ளன. ஆய்வின் நோக்கம் எந்த அளவு மற்றும் வீதங்களில் இந்த மருந்துகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கிடைக்கின்றன எப்தைத் தெரிந்து கொள்வதாக இருந்தது. அவசர கருத்தடை மாத்திரைகள் (ECP) தமிழ்நாட்டில் மருந்துக் கடைகளில் சேமிக்கப்படுவதில்லை என்பதையும் ஆய்வு வெளிப்படுத்தியது.
ALSO READ: கொரோனாவை வெல்ல வெறும் 48 மணி நேரம் மட்டுமே உள்ளது... ரஷ்யா கூறுவது என்ன?
இனப்பெருக்க சுகாதார சேவைகளுக்கான அறக்கட்டளை நடத்திய ஆய்வில், ஹரியானாவில் உள்ள கெமிஸ்டுகளில் 2 சதவீதம் பேர் மட்டுமே கருக்கலைப்பு மருந்துகளை இருப்பு வைத்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. கருக்கலைப்பு மருந்துகளை சேமித்து வைக்காததற்கு மாநில வாரியான சட்ட தடைகள் தொடர்ந்து ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றன.
மத்திய பிரதேசத்தில் சுமார் 6.5 சதவீத மருந்து கடைக்காரர்களும் பஞ்சாபில் வெறும் 2 சதவீத மருந்து கடைக்காரர்களும் மட்டுமே கருக்கலைப்பு மருந்துகளின் இருப்பை வைத்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
ALSO READ: மாதவிடாய் காலங்களில் பெண்கள் சர்க்கரை சாப்பிடுவது ஆபத்தானது...