RBI ரெப்போ விகிதத்தை அதிகரித்த பிறகு, இப்போது நிதி அமைச்சகம் சிறு சேமிப்பு திட்டங்களில் கிடைக்கும் வட்டி விகிதத்தை அதிகரிக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக வட்டி விகிதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா & பிபிஎஃப்
நீங்கள் சுகன்யா சம்ரித்தி யோஜனா அல்லது பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்தால், இந்தச் செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். SSY மற்றும் PPF முதலீடுகளுக்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் விரைவில் அதிகரிக்கலாம். இது நடந்தால், சிறுசேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் நேரடியாக பயனடைவார்கள்.
வங்கிகள் FD மற்றும் RD மீதான வட்டியை அதிகரித்து வருகின்றன
அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, அரசாங்க சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியை அதிகரிக்கலாம் என Zee Business Digital செய்தியில் வெளியான ஆதாரங்கள் கூறுகின்றன. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்திய பிறகு, பல்வேறு வங்கிகள் FD மற்றும் RD வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகித்தையும் அரசு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதங்கள் ஜூன் 30 அன்று மதிப்பாய்வு செய்யப்படும்
ஜூன் 30 அன்று, சிறு சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதங்கள் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளன. இந்த மதிப்பாய்வு ஜூலை முதல் செப்டம்பர் 2022 வரையிலான காலாண்டில் செய்யப்பட உள்ளது. இம்முறை அரசாங்கத்தின் இந்த சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் நீண்ட காலமாக எந்த மாற்றமும் இல்லை. அத்தகைய சூழ்நிலையில், பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, அதன் மீதான வட்டியை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
வட்டி விகிதத்தில் மாற்றம் சாத்தியமா
வங்கியும், ரிசர்வ் வங்கியும் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை அதிகரிப்பதற்கு ஆதரவாக உள்ளன. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரெப்போ விகிதத்தை எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என ரிசர்வ் வங்கி கவர்னர் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரிப்பதன் மூலம், PPF மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா மீதான வருமானமும் அதிகரிக்கும்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதங்கள் திருத்தப்படும்
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அரசாங்கத்தால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இந்த மதிப்பாய்வின் போது, வட்டி விகிதத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ அல்லது நிலையானதாக வைத்திருக்கவோ முடிவு எடுக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் நிதி அமைச்சகத்தால் தீர்மானிக்கப்படுகின்றன.
சேமிப்பு திட்டத்திற்கான வட்டி
தற்போது, PPF-க்கு ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் முதலீடு செய்பவர்களுக்கு 7.6% வட்டி கிடைக்கிறது. தேசிய சேமிப்பு ரிகரிங் கணக்கிற்கு (National Savings Recurring Deposits Account) 5.8% வட்டி கிடைக்கிறது. கிசான் விகாஸ் பத்திரம் மீதான வட்டி விகிதம் 6.9 சதவீதம்.
மேலும் படிக்க | EPF முக்கிய செய்தி: ஊதிய வரம்பு அதிகரிக்கலாம், அரசு பரிசீலனை தொடர்கிறது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR