ஆபத்தான பறவையை வளர்த்து வந்த 75 வயது முதியவர் அந்த பறவையால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்!!
ஆஸ்திரேலியாவின் வடக்கு பிளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் மார்வின் ஹாஜோஸ் என்பவர் தனது பண்ணை வீட்டில் பல அரிய வகை பறவைகளை வளர்த்து வந்தார். அவற்றுள் உலகின் ஆபத்தான பறவை இனத்தை சேர்ந்த கசோவோரிஸ் (Cassowaries) எனும் பறவையால் மார்வின் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
உலகின் மிகவும் ஆபத்தான பறவையாகக் கருதப்படும் காஸோவாரிக்கு பறக்கும் திறன் கிடையாது. மேலும், மனிதர்கள் மீது ஒவ்வாமை கொண்ட பறவையாகவே அறியப்படும் காஸோவாரியை வீட்டில் வளர்ப்பதற்கு பல வரன்முறைகள் இருக்கின்றன. இதைப் பின்பற்றியே காஸோவாரியை வளர்த்து வந்துள்ளார் ஹேஜோஸ். ஆனால், தனது வீட்டின் பின்புறத்தில் பறவை வளர்ந்து வரும் இடத்தில் தெரியாமல் தவறி விழுந்துள்ளார் ஹேஜோஸ்.
இதனால், பயந்த பறவை தனது தற்காப்புக்காக ஹேஜோஸை தாக்கியுள்ளது. தாக்குதலில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது முற்றிலும் விபத்து என்பதால் இதுபோன்ற பறவைகள் வளர்ப்போர் தகுந்த விதிமுறைகளைத் தெரிந்துகொண்டு செயல்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.