சிறந்த லோகோ வடிவமைப்புக்கு ரூ.1,50,000 பரிசு தொகை!

இந்தியாவின் G20 பிரசிடென்சிக்கான லோகோ வடிவமைப்பு போட்டியில் வெற்றிபெறும் முதல் நபருக்கு ரூ.1,50,000 பரிசுத்தொகை வழங்கப்படும்.  

Written by - RK Spark | Last Updated : May 19, 2022, 05:46 PM IST
  • இந்தியாவின் G20 பிரசிடென்சிக்கான லோகோ வடிவமைப்பு போட்டி.
  • முதல் பரிசாக ரூ.1,50,000 வழங்கப்பட உள்ளது.
  • பல நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளன.
சிறந்த லோகோ வடிவமைப்புக்கு ரூ.1,50,000 பரிசு தொகை!  title=

இந்தியா ஜி20 மாநாட்டை டிசம்பர் 1, 2022 முதல் நவம்பர் 20, 2023 வரை நடத்துகிறது, இது 2023ல் இந்தியாவில் முதன்முறையாகக் கூட்டப்படும் ஜி20 மாநாடு ஆகும்.  இந்தியா, அமெரிக்கா, மெக்சிகோ, சீனா, பிரிட்டன், ரஷ்யா, தென் கொரியா, இந்தோனேசியா, பிரான்ஸ், சவூதி அரேபியா, இத்தாலி, துருக்கி, பிரேசில், கனடா, அர்ஜென்டினா, ஜெர்மனி, ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகள் ஜி20 அமைப்பின் உறுப்பினராக உள்ளன. தற்போது இந்தியாவின் ஜி20 பிரசிடென்சிக்கான லோகோ வடிவமைப்பு போட்டியை வெளியுறவு அமைச்சகம் (எம்இஏ) தொடங்கியுள்ளது.  

g20

மேலும் படிக்க | இந்த ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்: 14% அகவிலைப்படி அதிகரிப்பு

MyGov படி, ஜி20 பிரசிடென்சிக்கான லோகோ "தேசம் முழுவதும் மற்றும் சர்வதேச அளவில், தனித்துவமான "இந்தியா" ஜி20 ஐ பிரதிபலிக்க வேண்டும்.  லோகோவில் என்னென்னவெல்லாம் இடம்பெற்று இருக்க வேண்டும் என்பது குறித்த சில முக்கிய விதிகளும் உள்ளன.  இந்தியாவின் ஜி20 கருப்பொருள் முன்னுரிமைகள் லோகோவில் ஹைலைட் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.  அனைவருக்கும் நிலையான வளர்ச்சி, மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறை, சமமான மற்றும் நெகிழ்ச்சியான வளர்ச்சி, ஒரே குடும்பமாக உலகம் மற்றும் பலதரப்பு கூட்டாண்மைகள் போன்றவற்றை உணர்த்துவதாக அமைய வேண்டும்.  லோகோவானது 'அம்ரித்கால்' - 75 முதல் 100வது சுதந்திர தினம் வரையிலான இந்தியாவின் 25 ஆண்டு கால பயணத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.  தேசிய கொடியின் மூவர்ணத்தை கொண்டு கலை வெளிப்பாடுகள் இடம்பெற்றிருக்க வேண்டும், லோகோ முக்கியமாக ஜி20 ஐ பிரதிபலிக்க வேண்டும். 

g20

மேலும் லோகோவில் இந்தியாவின் வளமான கலாச்சாரம், தத்துவம் மற்றும் பாரம்பரியம், வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் தேசிய சின்னங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட அல்லது பிரதிபலிக்கும் சின்னங்கள் இருக்கலாம்.  லோகோ வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் உரைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும், முதல் வெற்றியாளருக்கு ரூ.1,50,000ம், அடுத்த ஐந்து சிறந்த பதிவுகளுக்கு தலா ரூ.15,000ம், அடுத்த ஐந்து பதிவுகளுக்கு தலா ரூ.10,000ம் வரிகள் கழித்த பிறகு வழங்கப்படும்.   பரிசுத் தொகை மின்னணு பரிமாற்றம் மூலம் மட்டுமே மாற்றப்படும். 

இந்த போட்டியில் நீங்கள் வடிவமைத்த லோகோக்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜூன் 7, 2022 ஆகும். லோகோவை பற்றிய சுருக்கமான விளக்கத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.  mygov.in-ன் கிரியேட்டிவ் கார்னர் என்கிற பிரிவில் சமர்ப்பிப்பவர்களின் லோகோக்கள் மட்டுமே மதிப்பீட்டிற்கு பரிசீலிக்கப்படும்,  அனைத்து லோகோக்களும் சிறப்பு குழுவால் மதிப்பிடப்படும்.  மேலும் போட்டியில் கலந்து கொள்பவர்களின் MyGov புரொபைலில் உள்ள விவரங்கள் சரியானதாகவும், அப்டேட் ஆகவும் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | MTNL வழங்கும் அசத்தல் திட்டம்; ரூ.141 விலையில் 365 நாட்கள் வேலிடிட்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News