Ginger Tea vs Ginger Water: இஞ்சி தண்ணீர் பொதுவாக இஞ்சி வேரில் இருந்து தயாரிக்கப்படுகிறது, எனவே அதன் சுவை இஞ்சி டீயை விட அதிக சக்தி கொண்டதாக இருக்கும். இதில் வைட்டமின் பி6, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இஞ்சிதண்ணீரை குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது. மறுபுறம், இஞ்சி டீ தூள் அல்லது உலர்ந்த இஞ்சியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது இஞ்சி தண்ணீரை விட லேசான மற்றும் குறைந்த சுவை கொண்டது மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரசாயனங்கள் நிறைந்தது. இஞ்சி டீ உட்கொள்வது குமட்டலைப் போக்க உதவுகிறது, உடலை நச்சுத்தன்மை இல்லாமல் ஆக்குகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
மேலும் படிக்க | ஆரஞ்சு பழத்தில் இருக்கு உங்கள் எடை இழப்பு ரகசியம்: இப்படி சாப்பிடுங்க
இஞ்சி டீ அல்லது இஞ்சி தண்ணீர்? உடலுக்கு எது சிறந்தது?
இஞ்சி டீ
பொதுவாக இஞ்சி டீ, கிரீன் டீயுடன் கணக்கிடப்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த, இஞ்சி டீ ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் இஞ்சி டீ நமது கீல்வாதத்தை மோசமாக்கலாம். இது அதிக அளவு வாயு, வீக்கம் மற்றும் கவலையை ஏற்படுத்தும். கர்ப்பகாலத்தில் இஞ்சி டீ குமட்டல் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது. சில ஆராய்ச்சிகள் இஞ்சி டீ குடித்து வந்தால் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இருக்கும் என்று கூறுகின்றன.
இஞ்சி தண்ணீர்
வறண்ட இஞ்சி நீர் வாயு பிரச்சனைகளுக்கு வேலை செய்கிறது. உலர்ந்த இஞ்சித் தூள், சுந்தி அல்லது உலர் இஞ்சி நீர் என்றும் அழைக்கப்படுகிறது, இது உங்கள் செரிமான அமைப்பை சமநிலைப்படுத்தும் மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கும். உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கும் உலர் இஞ்சி தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும், இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் பசியைக் குறைக்கிறது. இது தவிர இஞ்சி தண்ணீர் சளி அல்லது இருமலுக்கு மருந்தாக செயல்படுகிறது. அதே போல இஞ்சி தண்ணீர் இதயத்திற்கு நன்மை பயக்கும். இஞ்சி தண்ணீர் உடலில் இரத்த நாளங்களைத் திறந்து, சிறந்த சுழற்சியை ஊக்குவிக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
கவனத்தில் கொள்ள வேண்டியவை
இஞ்சியை உலர்த்தியோ அல்லது புதியதாகவோ பயன்படுத்தினால், அதை தேன் அல்லது எலுமிச்சையுடன் கலந்து ஒரு சிறந்த இஞ்சி பானமாக மாற்றலாம், ஆனால் அதை அதிகமாக உட்கொள்வது லூஸ் மோஷன் மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தும். நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால், இரத்தப்போக்கு கோளாறு உள்ளதா அல்லது இரத்தத்தை மெலிக்கும் மருந்துகள் அல்லது நீரிழிவு நோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால் இவற்றை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை கேட்டு கொள்ளவும். இஞ்சி தண்ணீர் மற்றும் இஞ்சி டீ இரண்டும் உடலுக்கு நன்மை பயக்கும், ஆனால் இஞ்சி தண்ணீர் வாயு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது, அதே நேரத்தில் சளி மற்றும் இரத்த ஓட்டத்தை குணப்படுத்துகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ