Gold, Silver Rate Update, 21 July 2021: பக்ரீத் பண்டிகை காரணமாக இன்று MCX இல் வர்த்தகம் நடக்கவில்லை. நேற்று அதாவது செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் கோல்ட் ஃப்யூச்சர்ஸின் விலை பெரும் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகம் செய்யப்பட்டது. இன்ட்ராடேயில், தங்கம் 10 கிராமுக்கு 48,295 ரூபாயாக உயர்ந்தது, பின்னர் 47,771 ரூபாயாக குறைந்தது. கடைசி ஒரு மணி நேரத்தில் வலுவான விற்பனை காரணமாக தங்க ஃப்யூச்சர்ஸ் 10 கிராமுக்கு ரூ .200 குறைந்து ரூ .47,876 ஆக முடிவடைந்தது.
இன்று சென்னையில் (Chennai) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 36 ரூபாய் குறைந்து 4,530 ரூபாயாக குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 288 குறைந்து 36,240 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்துக் கொண்டிருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
தூய தங்கத்தைப் பொறுத்தவரை, சென்னையில் கிராமுக்கு 39 ரூபாய் குறைந்து 4,942 ரூபாயாக உள்ளது. மேலும், சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து ரூ. 39,536 ரூபாயாக உள்ளது. 10 கிராம் தங்கம் இன்று காலை ரூ. 49,420-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இன்று சென்னையில் ஆபரண வெள்ளி கிராமுக்கு 80 காசுகள் குறைந்து 71.50 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 800 ரூபாய் குறைந்து ரூ.71,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து குறைந்துகொண்டிருந்த வெள்ளியின் விலை தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: Gold Hallmark: 91.6 ஹால்மார்க் என்றால் என்ன; பயன்கள் என்ன
பெரும்பாலான நாடுகளில் தங்கம் முதலீட்டுக்கான வழியாக மட்டுமே இருக்கும் வேளையில், நம் நாட்டில் மட்டும்தான் இதற்கு பலவகை பயன்பாடுகள் உள்ளன.
தங்கத்தின் விலை (Gold Rate) கொரோனா காலத்தில் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகிறது. இது மக்களுக்கு பலவித சிரமங்களையும் அளித்து வருகிறது.
கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை காரணமாக உலகளாவிய சந்தைகளில் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்களைக் காண முடிகின்றது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலையிலும் ஸ்திரமற்ற தன்மையே உள்ளது.
பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.
ALSO READ:Gold Rate Today: இப்போது தங்கம் வாங்கலாமா? விலை நிலவரம் என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR