நீங்கள் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்பவர் என்றால், இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். வரும் நாட்களில் விமான டிக்கெட் விலை பெருமளவு குறையும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, மார்ச் 27 முதல் சர்வதேச விமான சேவைகளைத் தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மார்ச் 27 முதல் வழக்கமான சர்வதேச பயணம் மீண்டும் தொடங்கும் போது விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தொழில்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
விரைவில் சர்வதேச விமான சேவை தொடங்கும்
விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் காரணமாக பயணிகள் கட்டணம் குறையும் வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இதனால், கட்டணம் 40 முதல் 50 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. உண்மையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக, சர்வதேச விமானங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது.
மேலும் படிக்க | மிஸ் பண்ணிடாதீங்க! ஆப்பிள் மேக்புக்கை வாங்க சிறந்த நேரம் இதுதான் !
விமான சேவையை அதிகரிக்க விமான நிறுவனங்கள் பரிசீலனை
லுஃப்தான்சா மற்றும் க்ரூப் கேரியர் சுவிஸ் வரும் காலங்களில் விமானங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளன. அதே நேரத்தில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவையை 17% அதிகரிக்க பரிசீலித்து வருகிறது. உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோ வரும் மாதங்களில் 100 சர்வதேச விமானங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
கட்டணம் 100% அதிகரித்தது
விமான சேவை வழக்கமான நிலைக்கும் திரும்பும் என்பதால், விமானத்தின் கட்டணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி என்கின்றன ஊடக அறிக்கைகள். உண்மையில், நாட்டில் வழக்கமான சர்வதேச விமானங்களுக்கான தடையின் போது, சில நாடுகளுடன் ஏர் பப்பிள் அமைப்பின் கீழ் வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு விமானங்களை இயக்க விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதன் காரணமாக, இந்தியா - அமெரிக்கா உள்ளிட்ட சில முக்கிய விமான வழித்தடங்களில் கட்டணங்கள் தொற்றுநோய்க்கு முந்தைய காலத்தை விட 100 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதிக தேவை, குறைந்த சப்ளை காரணமாக அதிகரித்த கட்டணம்
சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில், அதிக தேவை காரணமாக கட்டணம் அதிகரித்தது. விமான கட்டணம் இரட்டிப்பாக அதிகரித்தது. இப்போது மார்ச் 27 முதல் விமானங்கள் இயல்பு நிலைக்கு வருவதால் கட்டணம் குறைய வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க | ரூ.50,000 Asus லேப்டாப் வெறும் 15,000 ரூபாய்க்கு விற்பனை: அசத்தும் அமேசான் சேல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR