Good news! நவம்பர் 11 அன்று சர்வதேச அளவில் PUBG அறிமுகம்

பப்ஜி ரசிகர்களுக்கு  பிடித்தமான விளையாட்டுகளை தொடர்ந்து உருவாக்கவிருப்பதாக கிராஃப்டன் தலைமை நிர்வாக அதிகாரி சிஎச் கிம் தெரிவித்தார்

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 24, 2021, 04:53 PM IST
  • பப்ஜி விளையாடலாமா?
  • 50 மில்லியனுக்கும் அதிகமான முன்பதிவு
  • நவம்பர் 11 முதல் பப்ஜி ரெடி
Good news! நவம்பர் 11 அன்று சர்வதேச அளவில் PUBG அறிமுகம் title=

PUBG இன் ரசிகர்களுக்கு நல்ல செய்தி, இந்த வேடிக்கையான விளையாட்டு நவம்பர் 11 அன்று உலகளவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

நீண்ட காலமாக PUBG (PlayerUnknown's Battlegrounds) விளையாட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்களின் காத்திருப்பு இப்போது முடிவுக்கு வரவிருக்கிறது. தென் கொரிய கேம் டெவலப்பர் நிறுவனமான கிராஃப்டன் (South Korean game developer company Krafton), வரவிருக்கும் கேம் PUBG: New State நவம்பர் 11 அன்று உலகளவில் தொடங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த கேம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பதிப்புகள் இரண்டிலும் ஒரே நேரத்தில் தொடங்கப்படும்.

உலகெங்கிலும் உள்ள பப்ஜி ரசிகர்களுக்கு  பிடித்தமான விளையாட்டுகளை கிராஃப்டன் தொடர்ந்து உருவாக்கும் என்று கிராஃப்டன் தலைமை நிர்வாக அதிகாரி சிஎச் கிம் (Crafton CEO CH Kim) கூறினார். PUBG: நியூ ஸ்டேட் (PUBG: New State) விளையாட்டு, ஆண்ட்ராய்ட் மற்றும் iOS இல் 50 மில்லியனுக்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

2021, பிப்ரவரி மாதம் முன் பதிவு தொடங்கியது. பப்ஜியின் இந்திய நிறுவனம், இந்திய கேமிங், இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் ஐடி என்டர்டெயின்மென்ட் (Indian gaming, e-sports and IT entertainment industry) துறையின் வளர்ச்சியில் அதிக முதலீடு செய்வதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read | Vivo புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்; விலை மற்றும் விபரங்கள்

PUBG முன் பதிவு செய்வது எப்படி (How to do PUBG) என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். பப்ஜியின் New State விளையாட்டிற்கு முன் பதிவு செய்வதற்கு, முதலில் Android மற்றும் iOSக்கான முன் பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, நீங்கள் தொடர்புடைய ஆப் ஸ்டோருக்குத் திருப்பி விடப்படுவீர்கள்.

இப்போது கூகுள் ப்ளேவில் முன்பதிவு விருப்பத்தை அல்லது ஆப் ஸ்டோரில் முன்கூட்டிய ஆர்டர் விருப்பத்தை கிளிக் செய்யவும். இந்த கேம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும்போது பதிவிறக்கம் செய்வதற்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள்.

பல நபர்கள் ஒரே சமயத்தில் விளையாடும் பேட்டில் கிரவுண்ட் எனப்படும் சுடுதல் விளையாட்டு வகையைச் சேர்ந்த பப்ஜி விளையாட்டில், ஆகும். ஒரே சமயத்தில் அதிகபட்சமாக நூறு நபர்கள் விளையாடலாம். விளையாடத் துவங்கும் முன் தனியாக விளையாடுவது, இருவராக விளையாடுவது அல்லது குழுவாக விளையாடுவது என்பதை ஒருவர் முடிவு செய்துக் கொள்ளலாம்.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைக் கருத்தில் கொண்டு, 2020 செப்டம்பர் இரண்டாம் தேதியன்று பப்ஜிக்கு தடைவிதிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ், பப்ஜி உட்பட மொத்தம் 118 சீன செயலிகள் தடை செய்யப்படுவதாக, இந்திய அரசு அறிவித்தது.  

Read Also | நம்ப முடியாத விலையில் iPhone 12: Flipkart அதிரடி பண்டிகை கால சலுகை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News