பொருளாதார நிபுணர் சர். டபிள்யூ ஆர்தர் லூயிஸ் நோபல் பரிசு பெற்ற நாளை நினைவு கூறும் வகையில் கூகுள் தனது டூடுலில் அவரது புகைப்படத்தை வைத்து கௌரவித்துள்ளது..!
புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், பேராசிரியருமான சர் W. ஆர்தர் லூயிஸுக்கு (Sir W Arthur Lewis) பொருளாதாரத்தில் நோபல் பரிசு வழங்கப்பட்ட நாளை நினைவுப்படுத்தி கொளரவம் செய்யும் வகையில் உலகின் மிகப்பெரிய தேடு பொறியான கூகுள் தனது அவரது புகைப்படத்தை டூடுலில் வெளியிட்டுள்ளது.
கருப்பு இனத்தவரான சர் W. ஆர்தர், 23 ஜனவரி 1915 ஆம் ஆண்டு செயின்ட் லூசியாவில் பிறந்த இவர் இளம் வயதிலேயே பள்ளியில் சிறந்து விளங்கினார். தனது 14 வயதிலே பாடத்திட்டத்தை முழுவதுமாக படித்து தேர்ந்தார். இறுதி தேர்வினை எழுத போதுமான வயதை அவர் 1932 ஆம் ஆண்டில் எட்டினார். லூயிஸுக்கு லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் கல்வி கற்க அரசாங்க உதவித்தொகை வழங்கப்பட்டது. இதன் காரணமாகவே அவர் பொருளாதரத்தில் மிக சிறந்தவராக தன்னை மேம்படுத்திக் கொண்டார்.
ALSO READ | டிஜிட்டல் இந்தியாவை தொடர்ந்து, Wi-Fi புரட்சி; இனி டீ கடையில் கூட Wi-Fi கிடைக்கும்!
ஆனால், லூயீஸ் பொருளாதரத்தில் பயற்சி பெற அப்போதைய பிரிட்டிஷ் காலனிகளில் இனரீதியாக பாகுபாடு காட்டப்பட்டதால், இவரால் மருத்துவம் அல்லது வழக்கறிஞர் ஆக படிப்பதற்கு தான் வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. கடுமையான போரட்டத்திற்கு பிறகே இவர் பயின்றார். தனது 33வது வயதில், லூயிஸ் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் முழு பேராசிரியராகிவிட்டார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் முதல் கறுப்பின ஆசிரிய உறுப்பினராகவும், பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் (மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில்) நாற்காலி வைத்த முதல் கறுப்பின நபராகவும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முழு பேராசிரியராகப் பெற்ற முதல் கறுப்பின பயிற்றுவிப்பாளராகவும் ஆனார்.
லூயிஸ் தனது கவனத்தை உலக பொருளாதார வரலாறு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மாற்றினார், 1954 ஆம் ஆண்டில் தனது அடிப்படைக் கட்டுரையான “வரம்பற்ற தொழிலாளர் வழங்கலுடன் பொருளாதார மேம்பாடு” (“Economic Development with Unlimited Supplies of Labour) என்ற கட்டுரையை வெளியிட்டார். பல மதிப்புமிக்க சாதனைகளில், லூயிஸ் ஐக்கிய நாடுகள் சபைக்கு செல்வாக்குமிக்க பணிகளை வழங்கினார் மற்றும் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் கரீபியன் அரசாங்கங்களின் ஆலோசகராக தனது நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
ALSO READ | 800 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த டிசம்பரில் வானில் Christmas Star தெரியப் போகிறதா?
இதையடுத்து, கரீபியன் அபிவிருத்தி வங்கியின் முதல் தலைவராக நிறுவவும் பணியாற்றினார். 1991 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி தனது 76 வயதில் இறந்த பிறகு, லூசியாவில் உள்ள சர் W. ஆர்தர் லூயிஸ் சமுதாயக் கல்லூரியின் மைதானத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR