மின்சார கார் விற்பனையை அதிகரிக்க ₹ 50k வரை சலுகையை வழங்குகிறது அரசு....
கச்சா எண்ணெய் இறக்குமதியால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படுவதை அடுத்து, எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்குவதற்காக, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.
ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்கமதி செய்து வருகிறது. ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை இந்தியா இதற்காக செலவிடுகிறது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அரசு ஊக்குவிக்க உள்ளது. இந்த வகை வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாது.
ஆனால் எலெக்டிரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருக்கிறது. எலெக்ட்ரிக் கார்கள் வழக்கமான பெட்ரோல், டீசல் கார்களை காட்டிலும் 2 முதல் 2.5 சதவீதம் வரை அதிக விலைக்கு விற்கப்படுகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்குவதற்காக, வாடிக்கையார்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின்கீழ், இந்த வகை கார்கள் வாங்குபவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கும் வகையில், மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த வாகனங்களை வாங்க மிக எளிதாக வங்கிக் கடன் கிடைக்கவும், வட்டி விகிதத்தை குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் இந்த முயற்சியால் இந்த வகை வாகனங்கள் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுவர். கார்கள் உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்களும் இவ்வகை கார்களை உற்பத்தி செய்ய அதிக முனைப்பு காட்டும்.