இன்று முதல் புதிய GST அமல்... குறைந்த விலையில் வீடு வாங்கலாம்..

இன்று முதல் புதிய நிதியாண்டு தொடங்கியதால், வீடு வாங்க நினைப்பவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 1, 2019, 01:54 PM IST
இன்று முதல் புதிய GST அமல்... குறைந்த விலையில் வீடு வாங்கலாம்.. title=

சமீபத்தில் நடந்த 34வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் ரியல் எஸ்டேட் துறைக்கு உதவும் நோக்கில் கட்டுமான தொழிலுக்கு ஊக்கம் அளிக்கவும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. 

12% ஜி.எஸ்.டி வரி கட்டுமானத் தொழிலை கடுமையாக பாதிக்கிறது என தொடர்ந்து கட்டுமான நிறுவனங்கள் கூறிவந்த நிலையில், மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விகித்தில் மாற்றங்கள் செய்தது. இதில் அடுக்குமாடி குடியுருப்புகளுக்கு, மலிவு வீட்டுப் பிரிவில் காட்டப்படும் வீடுகளுக்கும் ஜி.எஸ்.டி வரி குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மலிவு விலையில் அதிக குடியிருப்பு வசதிகளின் கிடைப்பை உறுதி செய்ய, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80-IBA கீழ் பெறப்படும் நன்மைகள் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டுள்ளன. இதன் கீழ், மார்ச் 20, 2020 வரை அனுமதிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கு நன்மை கிடைக்கும்.

இந்த புதிய வரிவிதிப்பு இன்று முதல் (ஏப்ரல் 1) அமலுக்கு வருகிறது. இதனால் புதிய நிதி ஆண்டில் ஒரு வீட்டை வாங்க திட்டமிட்டு இருந்தால், நீங்கள் பயனடைவீர்கள். இதன் மூலம் மந்தநிலையில் இருந்த ரியல் எஸ்டேட் துறை தற்போது அடுத்தக் கட்டத்துக்கு செல்லும்.

Trending News