குருவும் சனியும் கூட்டணி சேர்ந்தால் என்ன விளைவு ஏற்படும்

மனிதர்களை நல்வழிக்கு கொண்டு செல்வதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 17, 2021, 08:44 AM IST
குருவும் சனியும் கூட்டணி சேர்ந்தால் என்ன விளைவு ஏற்படும் title=

மனிதர்களை நல்வழிக்கு கொண்டு செல்வதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை. குருபகவான் அறிவில் சிறந்தவர். தேவர்களின் குருவாக திகழ்பவர். வியாழன் என்பது அறிவு, ஆசிரியர், குழந்தைகள், மூத்த சகோதரர், கல்வி, சமயப் பணி, செல்வம், தொண்டு, அறம் மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றின் கிரகம். வியாழன் ராசியை மாற்றும் போதெல்லாம், நாடு மற்றும் உலகம் உட்பட அனைத்து ராசி அறிகுறிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குருவும் சனியும் ஜாதகத்தில் கூட்டணியாக அமைந்திருந்தால் என்ன பலன்கள் என்பதை பார்க்கலாம்.

பேரழிவுகள் வரலாம்
கும்ப ராசிக்கு அதிபதி சனி, சனியின் ராசியில் வியாழன் நுழைவது வானிலையை மிகவும் பாதிக்கிறது. எனவே, இந்த நேரத்தில், குளிர்கால மழை, கடுமையான குளிர், அடர்ந்த மூடுபனி, குளிர் அலை, கடுமையான பனிப்பொழிவு, புயல், இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆனால், கொரோனாவின் தாக்கம் குறையும்.

ALSO READ | ஜோதி வடிவாய் அருளும் ஈசனின் 12 ஜோதிர்லிங்கங்களின் சிறப்புகள்

மேஷம் - வியாழன் மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் சிறப்பான பலனைத் தரும். வாழ்க்கையில் பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பொருளாதார நிலையில் அபரிமிதமான முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. சில முக்கியமான வேலைகள் கிடைக்கலாம். சிறப்பான பண ஆதாயம் உண்டாகும். அன்னை லட்சுமியின் சிறப்பு அருளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம் - குரு பெயர்ச்சி பத்தாம் வீட்டில் நடக்கிறது. உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

மிதுனம் - அதிர்ஷ்ட வீடான ஒன்பதாம் வீட்டில் குரு பெயர்ச்சி நடக்கிறது. இந்த ராசிக்காரர்களும் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு இக்காலம் கலந்திருக்கும். கவனமாக இருங்கள், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. சிக்கிய பணத்தை மீட்டெடுக்க முடியும்.

சிம்மம் - தேவகுரு வியாழன் ஏழாவது வீட்டில் அமையும். வியாபாரத்தில் முன்பை விட நிலைமைகள் சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருக்கும் ஆனால் அதிகம் கவலைப்பட தேவையில்லை.

கன்னி - இந்த ராசிக்காரர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும். தொழிலில் புதிய உயரங்களை அடைவார்கள். தடைபட்ட பணிகள் மீண்டும் தொடங்கும். பணியிடத்தில் ஒவ்வொரு சவாலையும் நீங்கள் நன்றாகச் சமாளிக்க முடியும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். ஒரு புதிய திட்டம் கண்டுபிடிக்கப்படலாம், அதில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கும்.

துலாம் - பணம் சம்பாதிக்க புதிய மற்றும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம் - நான்காவது வீட்டில் குரு பெயர்ச்சி நடக்கும், இது கலவையான விளைவை ஏற்படுத்தும். 2022 ஆம் ஆண்டில் நீங்கள் ஒரு வீடு அல்லது ஏதேனும் ஒரு சொத்தை வாங்கலாம். நிதி நிலை நன்றாக இருக்கும்.

தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு குரு ராசி மாற்றம் மூன்றாம் வீட்டில் நடக்கும். சவால்களை எதிர்கொள்வதற்கும் இலக்குகளை அடைவதற்கும் இந்த நேரம் சாதகமற்றதாக இருக்கும்.

மகரம் - குரு இரண்டாம் வீட்டில் இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். நோய்கள் ஏற்படலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பெரிய சாதனைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் வேலை தேடுகிறீர்களானால், உங்களுக்கு நல்ல சலுகை கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். முதலீட்டுத் திட்டத்தை உருவாக்கலாம்.

கும்பம் - இந்த ராசிக்காரர்களுக்கு 2022ஆம் ஆண்டின் முற்பகுதியில் நல்ல பலன்கள் கிடைக்கும். பொருளாதார நடவடிக்கைகளின் அடிப்படையில் இது அற்புதமாக இருக்கும். புதிய பணிகளில் உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்யலாம்.

மீனம் - மீன ராசிக்காரர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். மொத்தத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும்.

ALSO RRAD | தன்தேராஸ் கொண்டாடப்படும் காரணம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News