இயற்கையான முறையில் கண்டுபிடிக்கப்பட்டு அதனை நாம் பயன்படுத்தும் போது, அதில் கிடைக்கும் முடிவுகள் எப்போதும் சிறந்ததாக இருக்கும். இவற்றில் எந்த இரசாயன பக்க விளைவுகளும் இல்லை என்பது மட்டுமல்லாமல், அவை உங்களுக்கு நீண்ட கால நன்மைகளை வழங்குகிறது. இந்தியாவில் பழங்காலத்திலிருந்தே வீட்டு அழகு வைத்தியங்கள் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது, அவற்றில் பலவற்றை நாம் இன்றும் பயன்படுத்தி வருகின்றோம். இந்திய மாநிலமான கேரளாவில் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பலவிதமான அழகு சாதன பொருட்கள் உள்ளன. நீங்கள் அதிக அடர்த்தியான முறையில் முடி வளர்க்க விரும்பினால், பாரம்பரிய கேரள பாணி எண்ணெய்யை பயன்படுத்துவது நல்ல தீர்வை தரும். இந்த பாரம்பரியமிக்க எண்ணையை வீட்டிலேயே தயார் செய்யலாம்.
மேலும் படிக்க | இதய ஆரோக்கியம் & ரத்த சர்க்கரையை சீராக்கும் ஒமேகா அமிலங்கள், உடலுக்கு ஏன் அவசியம்?
தேவையான மூலப்பொருட்கள்
ஒரு சக்திவாய்ந்த தலை முடிக்கான எண்ணெய் கலவையை தயாரிக்க, நீங்கள் தரமான பொருட்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பழைய பொருட்களை விட புதிய பொருட்களை பயன்படுத்தி எண்ணெய் தயாரிப்பது நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும். இந்த பாரம்பரிய கேரள பாணி எண்ணெய் தயாரிக்க உங்களுக்கு சில பொருட்களை தேவை. ஒரு கை அளவு புதிய கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் ஊறவைத்த வெந்தய விதைகள், 2 ஸ்பூன் செம்பருத்தி தூள், 10-15 சிறிய வெங்காயம், 500 மிலி தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் மற்றும் 10-12 மிளகுத்தூள் தேவை.
கேரளா ஸ்டைல் தலைமுடி எண்ணெய் தயாரிக்க தொடங்கும் முன் தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளுங்கள். கறிவேப்பிலையை நன்கு கழுவி, மெத்தி விதைகளை 4 மணிநேரம் ஊறவைத்து, கற்றாழையை எடுத்து கொள்ளவும். கறிவேப்பிலை, வெங்காயம், மேத்தி விதைகள், செம்பருத்தி பொடி, கற்றாழை ஆகியவற்றை நன்றாக கலந்து பேஸ்டாக ரெடி பண்ணவும். பிறகு தண்ணீர் சேர்க்கவும். இந்த கலவையை பாத்திரத்தில் மாற்றி, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி நெருப்பில் காட்டவும். 10-12 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு, மிளகுத்தூள் சேர்த்து இன்னும் 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இவை உங்கள் தலை அதிக குளிர்ச்சியடையாமல் இருப்பதை உறுதி செய்கிறது. பிறகு சூடான எண்ணெய் ஆறியதும், எண்ணெயை வடிகட்டி பாட்டிலில் வைக்கவும். இவற்றை இரண்டு மாதங்கள் வரை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த எண்ணையை நீங்கள் எப்போது பயன்படுத்த நினைக்கிறீர்களோ அப்போது சிறிது சூடாக்கி உங்கள் தலையில் தடவவும். இந்த சூடான எண்ணெயை உங்கள் தலையில் 3-5 நிமிடங்கள் மசாஜ் செய்து, 30 நிமிடங்களுக்கு ஷாம்பூ கொண்டு கழுவவும்.
எண்ணெயின் நன்மைகள்
இந்த கேரளா ஸ்டைல் எண்ணெய் பலரும் வீடுகளில் பயன்படுத்தி வரும் முறையாகும். கறிவேப்பிலையில் அதிக அளவு பீட்டா கரோட்டின் மற்றும் புரோட்டீன் உள்ளது, இவை முடி உதிர்வை குறைத்து, முடி வெள்ளை ஆவதை தடுக்கிறது. கற்றாழை மற்றும் செம்பருத்தி உங்கள் வேர்களை வலுப்படுத்த உதவுகிறது. வெங்காயம் முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் பழமையான முறைகளில் ஒன்றாகும். மரபணு முடி உதிர்வை தடுக்க, மூலிகைகள் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது. வெங்காயத்தில் சல்பர் உள்ளது, இது முடி மீண்டும் வளர தேவையான கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. சின்ஹா பாரம்பரிய கேரள பாணி ஹேர் எண்ணையில் அதிக ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது, இது முடி வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
மேலும் படிக்க | தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட்டால் சருமம் அழகு மேம்படும், உடல் இளைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ