அடேங்கப்பா.. தர்பூசணி சைசுக்கு விளைந்த எலுமிச்சை; எப்படி சாத்தியம்!!

ஹரியானா மாநிலம் ஹிஸார் பகுதியில் ஒரு எலுமிச்சை பழம் தர்பூசணி அளவிற்கு பெரியதாக சுமார் 2.5 கிலோவிற்குக் காய்த்துள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 29, 2020, 01:39 PM IST
அடேங்கப்பா.. தர்பூசணி சைசுக்கு விளைந்த எலுமிச்சை; எப்படி சாத்தியம்!! title=

ஹரியானா மாநிலம் ஹிஸார் பகுதியில் ஒரு எலுமிச்சை பழம் தர்பூசணி அளவிற்கு பெரியதாக சுமார் 2.5 கிலோவிற்குக் காய்த்துள்ளது!

எலுமிச்சம்பழம் நாம் எல்லோருக்கும் தெரியும் சிறிய அளவில் மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஒரு பழம். கிட்டத்தட்ட லட்டு வடிவத்தில் இருக்கும் எலுமிச்சம்பழம் (lemon) எவ்வளவு பெரிய எலுமிச்சையாக இருந்தாலும் நம் உள்ளங்கைக்குள் அடங்கிவிடும். இந்த எலுமிச்சையைத் தான் நமக்குத் தெரியும். இந்நிலையில், ஹரியானா (Haryana) மாநிலம் ஹிஸார் பகுதியில் ஒரு எலுமிச்சை பழம் தர்பூசணி அளவிற்கு பெரியதாக சுமார் 2.5 கிலோவிற்குக் காய்த்துள்ளது. 

ஹிசார் பகுதியில் உள்ளகிஷங்கரா என்ற பகுதியில் உள்ள விஜேந்திர தோரி என்ற விவசாயி தன் நிலத்தில் எலுமிச்சை சாகுபடி செய்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் தான் சுமார் 2.5 கிலோ எடை கொண்ட தர்பூசணி (watermelon) அளவிலான எலுமிச்சை காய்த்துள்ளது. இதை அங்குள்ளவர்கள் அதிசயமாகப் பார்த்துச் செல்கின்றனர்.

விஜேந்திர தோரி பொதுவாக தன் 7 ஏக்கர் நிலத்தில் கின்னோவ் ரக ஆரஞ்சு பழத்தைத் தான் சாகுபடி செய்வார், சீசன் நேரங்களில் மட்டும் மால்டா மற்றும் எலுமிச்சை சாகுபடி செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் தோட்டத்தில் எலுமிச்சை மரம் காய் விட்டது. அது வழக்கத்தை விட மிகப்பெரிய அளவிலிருந்தது. ஒவ்வொரு எலுமிச்சையும் சுமார் 2.5 கிலோ எடை கொண்டதாக இருந்தது.

No description available.

ALSO READ | See Pic's: கர்ப்பமான நாய்க்கு மகப்பேறு போட்டோஷூட் நடத்திய நாய் உரிமையாளர்!

இது குறித்து விஜேந்திர தோரியிடம் கேட்ட போது தான் இந்த மரத்திற்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துவதாகவும் வேறு எந்த விதமான ரசாயனத்தையும் கலப்பது இல்லை எனவும் தெரிவித்தார். பலர் இவர் முற்றிலும் இயற்கை விவசாயம் பார்ப்பதால் தான் எலுமிச்சை இவ்வளவு பெரிதாக வந்துள்ளதாகக் கூறுகின்றனர். பலர் இவர் தோட்டத்திற்கு வந்து எலுமிச்சை பழங்களைப் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

No description available.

இந்த எலுமிச்சையை ஆய்வு செய்த தோட்டக்கலைத்துறை விஞ்ஞானிகள் இது எந்த ரக எலுமிச்சை எனக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஆனால் இந்த எலுமிச்சை கல்லடைப்பிற்கு நல்ல தீர்வை தருவதாக விஜேந்திர தோரி தெரிவித்துள்ளார். தற்போது இந்த எலுமிச்சை உலகிலேயே மிகப்பெரிய எலுமிச்சை என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெரும் எனப் பலர் பேசி வருகின்றனர். இதுவரை நீங்கள் இவ்வளவு பெரிய எலுமிச்சையை பார்த்திருக்கிறீர்களா? அப்படிப் பார்த்திருந்தால் கமெண்டில் சொல்லுங்கள்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News