திருமணத்தில் கலந்துக் கொள்ள விருந்தினர்களை வாடகைக்கு எடுக்கும் விசித்திர நாடு!

திருமணத்திற்கு சென்றால், விருந்தினர்கள் தான் மொய் எழுதுவார்கள். ஆனால், திருமணத்தில் கலந்துக் கொள்வதற்கு சம்பளம் கொடுக்கும் நாடு எது தெரியுமா?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 24, 2021, 06:38 PM IST
  • இந்த நாட்டில் திருமணத்தில் கலந்துக் கொண்டால் மொய் எழுத வேண்டாம்
  • விருந்தினர்களை வாடகைக்கு எடுக்கும் விசித்திர நாடு!
  • திருமணத்தில் கலந்துக் கொள்ள சம்பளம் கொடுக்கும் நாடு
திருமணத்தில் கலந்துக் கொள்ள விருந்தினர்களை வாடகைக்கு எடுக்கும் விசித்திர நாடு! title=

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிப்படுவதாக இந்திய கலாச்சாரம் சொல்கிறது. திருமணம் என்பது வாழ்நாள் கனவாக இருக்கும் இந்தியாவில் இரு மனங்களை ஒன்றிணைப்பதை திருமணம் என்பதை விட, வாழ்நாள் கடமை கல்யாணம் என்ற எண்ணப்போக்கு கொண்டவர்கள் அதிகம்.

குழந்தை பிறந்ததில் இருந்தே, அதன் திருமணத்திற்காக சேமிக்கத் தொடங்குவதும் இந்தியாவில் தான். திருமணம் தொடர்பான நமது பாரம்பரிய எண்ணங்களுக்கும், பிற நாடுகளில் உள்ள திருமணங்களுக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமானது. அதை உண்மை என்று நிரூபிக்கும் செய்தி இது.
 
திருமணத்திற்கு சொந்த-பந்தங்கள், உற்றார்-உறவினர் புடைசூழ திருமணம் நடைபெறவேண்டும் என்பது இந்திய கலாச்சாரம். ஆனால், உலகில் இந்த ஒரு நாட்டில் மட்டும், திருமணத்திற்கு விருந்தினர்களை அழைக்க பணம் செலுத்த வேண்டும். ஆச்சரியமாக இருக்கிறதா? தென் கொரியாவில் தான் இந்த வழக்கம் இருக்கிறது.

மக்கள் தங்கள் சமூக நிலையை அனைவருக்கும் முன்னால் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக பல ஏஜென்சிகள் இயங்கி வருகின்றன. திருமணத்திற்கு விருந்தினர்களை ஏற்பாடு செய்துக் கொடுக்கும் நிறுவனங்கள் உண்டு. அதற்கு திருமணம் செய்துக் கொள்பவர்கள், தென் கொரியாவில் பணம் செலுத்த வேண்டும்.

Also Read | வேற லெவல் Wedding: நீருக்கடியில் திருமணம் புரிந்த தம்பதி நீடூழி வாழ்க!!

திருமண விருந்தில் அதிகமானவர்கள் கலந்துக் கொள்வது சமூகத்தில் பெருமையை கொடுக்கும் என்பதற்காக, அதிகமான விருந்தினர்கள் கல்யாணத்தில் கலந்துக் கொள்வதாக கணக்குக் காட்ட மக்கள் வாடகைக்கு ஆட்களை அழைக்கிறார்கள்.

அந்த விருந்தினர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், நன்றாக அலங்கரித்துக் கொண்டு, திருமண விருந்தில் கலந்து கொள்வதற்காகத் தான். அவர்கள் மொய்ப் பணம் கொடுக்க வேண்டாம். திருமணத்தில் கலந்து கொண்ட பணிக்காக அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படும். 

குளோபல் நியூஸ் இன்சைடரின் அறிக்கையின்படி, தென் கொரியாவில் திருமண விருந்தினர்களை நடத்தும் பல நிறுவனங்கள் உள்ளன. இந்த ஏஜென்சிகள் மூலம் வரும் விருந்தினர்கள், மிகவும் பண்பாக நடந்துக் கொள்ள பயிற்சி பெற்ற விருந்தினர்கள். திருமணத்தில் கலந்துக் கொள்ளும் அவர்கள், திருமணமாகும் தம்பதிகளின் குடும்பத்தின் மிக நெருங்கிய உறவினர்கள் போல் ஆசையுடனும் பாசத்துடனும் தோற்றமளிப்பார்கள். ஒரு திருமணத்தில் கலந்துக்கொள்ள போலி விருந்தினர் ஒருவருக்கு கொடுக்கப்படும் குறைந்தபட்ச சம்பளம் $ 20 அதாவது 1500 ரூபாய் ஆகும்.

Read Also | காதலர் தினத்தில் யானை மீது அமர்ந்து திருமணம் செய்த 59 ஜோடிகள்

போலி விருந்தினர் (Fake Guest) ஏற்பாடு செய்துக் கொண்டும் வணிகத்தில், ஹகேக் பிரெண்ட்ஸ் (Hagaek Friends) போன்ற பல ஏஜென்சிகள் பிரபலமாக இருக்கின்றன. கொரோனா காலத்தில் திருமணங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த ஏஜென்சிகளின் தொழிலும் முடங்கிப் போயிருந்தது. ஆனால் இப்போது கொரோனா பரவல் குறைந்துவிட்டதால், அவர்களின் வணிகமும் மீண்டும் சூடுபிடித்துவிட்டது.
 
போலி கெஸ்ட் ஏஜென்சிகளை நடத்தும் பலர், கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்த பிறகு தங்கள் தொழிலுக்கு இரட்டிப்பு மதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றானர். கொரோனாவுக்கு முன்பு, ஒரு திருமணத்திற்கு 5-10 விருந்தினர்களை வாடகைக்கு எடுப்பார்களாம். ஆனால் இப்போது ஒரு திருமணத்திற்கு 20-25 விருந்தினர்கள் தேவை என்று கேட்கிறார்களாம். அதிலும் தடுப்பூசி போடப்பட்ட போலி விருந்தினருக்கு கிராக்கி அதிகம்!

ஏன் தெரியுமா? தென் கொரியாவில், அரசு விதிகளின்படி, எந்தவொரு சமூக நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்ளும் நபர்களில் தடுப்பூசி போடப்படாதவர்களில் 49 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். எந்த விழாவில் கலந்துகொள்வதற்கும் தடுப்பூசி போட்டிருப்பது அவசியமாகிவிட்டது என்றாலும், சில இடங்களில் இதுபோன்ற கட்டுப்பாடு தளர்வும் உள்ளது. 

ALSO READ | திருமலையில் நடந்த முதல் திருமணம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News