Honda Shine 100: ஹோண்டாவின் புதிய பைக்... அதுவும் இவ்வளவு கம்மி விலையிலா!!

Honda Shine 100 Features: வாடிக்கையாளர்களின் மிகவும் வரவேற்பை பெற்ற ஹோண்டா ஷைன் வகை பைக்கில், ஷைன் 100 பைக் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் விலை, முக்கிய அம்சங்கள், தனிச்சிறப்புகளை இதில் காணலாம்.  

Written by - Sudharsan G | Last Updated : Mar 15, 2023, 06:28 PM IST
  • இந்தாண்டில் இது இவர்கள் அறிமுகப்படுத்தும் இரண்டாவது பைக் ஆகும்.
  • நடப்பாண்டில் ஹோண்டா ஆக்டிவா H-Smart பைக்கை அறிமுகப்படுத்தியது.
  • முன்பதிவு தொடங்கிய நிலையில், மே மாதம் டெலிவரி.
Honda Shine 100: ஹோண்டாவின் புதிய பைக்... அதுவும் இவ்வளவு கம்மி விலையிலா!! title=

Honda Shine 100 Features: ஹோண்டா டூ-வீலர்ஸ் இந்தியா, தனது புதிய ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100) பைக்கை நேற்று அறிமுகப்படுத்தியது. இது விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய ஹோண்டா ஷைன் 100, இந்தியாவில் ரூ.64,900 (ஷோருமிற்கு முன்) முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு அறிமுக விலையாகும். இதன், விலை எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

புக்கிங் முதல் டெலிவரி வரை...

ஆக்டிவா H-Smart மாடல் பைக்கிற்கு, பிறகு 2023ஆம் ஆண்டில் ஹோண்டா நிறுவனத்தின் இரண்டாவது பெரிய அறிமுகம் இதுவாகும். இந்த புதிய பைக் லிவோ மற்றும் சிடி110 பைக்குகளுடன் விற்பனை செய்யப்படும்.  புதிய ஷைன் 100 பைக்கை வாங்க மக்கள் இன்று (மார்ச் 15) முதல் முன்பதிவு செய்யலாம். அடுத்த மாதம் முதல் உற்பத்தி தொடங்கும். மே 2023 முதல் டெலிவரி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா ஷைன் 100-ஐ அறிமுகப்படுத்தி, ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அட்சுஷி ஒகடா கூறுகையில், “ஷைன் அதன் பிரிவில் மிகவும் பிரபலமான மற்றும் நம்பகமான பைக் பிராண்டாகும். இன்று நாம் ஹோண்டாவின் அனைத்து புதிய 100சிசி மோட்டார்சைக்கிள் - ஷைன் 100-ஐ வெளியிடுகிறோம்.

மேலும் படிக்க | Best SUV In India: ஹூண்டாய் க்ரெட்டாவின் எஸ்யூவிக்கு டஃப்ட் ஃபைட் கொடுக்கும் டாடா Curvv!

இது ஷைன் வகை பைக்குகளை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. ஷைன் 100 என்பது ஹோண்டாவின் அடுத்த பெரிய பாய்ச்சல் ஆகும், இது இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு மொபிலிட்டியை மேலும் அணுகக்கூடியதாகவும் மலிவு விலையாகவும் மாற்றுகிறது. அடிப்படை பயணிகள் பிரிவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வலுவான, நம்பகமான மற்றும் அதிக மைல்லேஜ் திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். 

நாங்கள் ஷைன் 100-ஐ அறிமுகப்படுத்தும்போது, எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு நாங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளித்து, இந்தப் பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் அவர்களின் எதிர்பார்ப்புகளை தாண்டிய சேவையை அளிக்க முயற்சி செய்கிறோம்.

ஹோண்டா ஷைன் 100 சிசியின் அம்சங்கள்

- புதிய ஹோண்டா ஷைன் 100 இந்தியாவில் 5 வண்ணங்களில் விற்பனைக்கு வரும். சிவப்பு நிற கோடுகளுடன் கருப்பு, நீல நிற கோடுகளுடன் கருப்பு, பச்சை நிற கோடுகளுடன் கருப்பு, தங்க நிற கோடுகளுடன் கருப்பு மற்றும் சாம்பல் நிற கோடுகளுடன் கருப்பு.

- புதிய ஷைன் 100 பைக், 168 மி.மீ., கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 786 மி.மீ., இருக்கை உயரம் பெறுகிறது.
ஷைன் 100 ஆனது முற்றிலும் புதிய ஏர்-கூல்டு, 99.7சிசி, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் மூலம் 7.6hp மற்றும் 6,000rpm இல், 8.05Nm ஆற்றலுடன் இயங்குகிறது.

- புதிய ஹோண்டா ஷைன் 100, குறைந்த சவாரி உயரத்துடன் நீண்ட இருக்கையைக் கொண்டிருக்கும்.
ஷைன் 100 ஆனது முன்பக்க கவ்ல், பிளாக்-அவுட் அலாய் வீல்கள், அலுமினிய கிராப் ரெயில் மற்றும் நேர்த்தியான மப்ளர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

- புதிய ஷைன் 100, OBD-2 இணக்கமானது மற்றும் E20 எரிபொருளில் (20 சதவீதம் எத்தனால் கலவையுடன் கூடிய பெட்ரோல்) இயங்கும் திறன் கொண்டது.

- புதிய பைக்கின் எரிபொருள் பம்ப் எரிபொருள் தொட்டிக்கு வெளியே நிலைநிறுத்தப்பட்டுள்ளது மற்றும் இது ஒரு ஆட்டோ சோக் அமைப்புடன் வருகிறது. இது 7,500 ஆர்பிஎம்மில் 7.5 பிஎச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 8.05 Nm இழுவை திறனையும் வெளிப்படுத்துகிறது.

- ஹோண்டா ஷைன் 100 ஆலசன் ஹெட்லைட், சைட்-ஸ்டாண்ட் இன்ஹிபிட்டர், ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

- புதிய ஷைன் 100 ஆனது, 1.9 மீட்டர் அளவிலான டர்னிங் ரேடியஸைக் கொண்டுள்ளது.

- HMSI ஷைன் 100 இல் ஒரு சிறப்பு, 6 ஆண்டு உத்தரவாதத் தொகுப்பையும் (3 ஆண்டுகள் தரநிலை + 3 ஆண்டுகள் விருப்ப நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம்) வழங்குகிறது.

மேலும் படிக்க | ராயல் என்ஃபீல்டு வெறும் ரூ.50 ஆயிரத்தில்..! EMI ரூ.5 ஆயிரம் மட்டுமே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News