இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கும் ஜாலி தான்! ரூட்டை மாத்தி யோசிக்க வேண்டியது எந்த ராசி?

மீன ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாள். தனுசு ராசிக்காரர்கள் தங்கள் வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்...

Written by - ZEE Bureau | Last Updated : Dec 7, 2021, 06:30 AM IST
இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கும் ஜாலி தான்! ரூட்டை மாத்தி யோசிக்க வேண்டியது எந்த ராசி?

Horoscope 2021 December 7: மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாய்கிழமை மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மீனத்தைத் தவிர மகரம், மிதுனம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நாள் சிறப்பாக அமையும். தனுசு ராசிக்காரர்கள் தங்கள் வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். கும்ப ராசிக்காரர்கள் கோபப்படுவதை தவிர்க்க வேண்டும். செவ்வாய்க்கிழமை உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா?

மேஷம்: செவ்வாய் கிழமையன்று உங்களுக்காக நேரம் ஒதுக்குவது நல்லது. பரஸ்பர நம்பிக்கை, குடும்ப உறவுகள் வலுப்படுத்தும். கல்வித்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு ஏற்ற நாள். வருமானம் நன்றாக இருக்கும் நாள் இன்று. புதிய அறிமுகங்கள் கிடைக்கும் மங்களகரமான நாள் இன்று.  

ரிஷபம்: வீட்டில் அன்பும் புரிதலும் காணப்படும். தொழிலதிபர்கள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும். வழக்கு, சிக்கல்களிலும் இருந்தும் நீதிமன்ற பிரச்சனைகள் இருந்தால், அவற்றில் இருந்தும் விடுபடலாம். வேலையை உரிய நேரத்தில் முடிக்க இன்று சாதகமான நாள்.  

மிதுனம்: நல்ல செய்தி கிடைக்கும். மரியாதைக்குரிய நபரின் வழிகாட்டுதலைப் பெறுவீர்கள். லாபத்திற்கான புதிய வழிகள் காணப்படும். சலனப்படாமல் இருந்தால் நிம்மதியாக இருக்கலாம். உங்களிடம் உள்ள சொத்துக்களைப் பற்றி பெருமிதம் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறத் தொடங்கும்.  

கடகம்: புதிய நம்பிக்கையுடன் நாள் தொடங்கும். வீட்டில் இருந்து வேலை செய்பவர்களின் பணிகள் குறித்த நேரத்தில் முடிவடையும். ரியல் எஸ்டேட்டுடன் தொடர்புடைய நபர்கள் தள்ளுபடி வழங்கி லாபமடையலாம். வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை பற்றிய தகவல்களைப் பெறலாம். திருமணமானவர்களுக்கு இல்லற வாழ்வில் சுமூகமாக இருக்கும்.

ALSO READ | அருகில் நெருங்கினாலே உயிர்பலி கேட்கும் கொலைகார மரம்

சிம்மம்: இன்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்தால் சுப பலன்கள் நிச்சயம். உத்தியோகஸ்தர்களுக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும். கொடுத்த கடன் திரும்பி வரும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமாக மாற்றங்கள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் இணைந்து புதிய திட்டங்களை உருவாக்கும் நாள்.  

கன்னி: மனம் விட்டு பேசும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் மகிழ்ச்சி ஏற்படும். முன்னேற்றத்திற்கான புதிய வழிகளையும் விருப்பங்களையும் கண்டுபிடிப்பது அவசியம். சொத்து தொடர்பான பணிகளை மேற்கொள்ள சாதகமான நாள். அதிகப்படியான செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

துலாம்: மற்றவர்களுடன் அரசியல் வாக்குவாதங்களை செய்ய வேண்டாம். புதிதாக முயற்சி செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் ஆர்வமும் மனதில் தோன்றும். உணவுத் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல நேரம். மாணவர்களுக்கு திறமையான ஆசிரியர்களின் உதவி கிடைக்கும். யாரையும் அதிகமாக நம்புவது மன அழுத்தத்தைக் கொடுக்கும் என்பதால், ஒருஇடைவெளியை பராமரிக்கவும்.

விருச்சிகம்: உங்களின் தாராள மனப்பான்மை அனைவரையும் கவர்ந்திழுக்கும். ஆன்லைனில் புதிய பொருட்கள் அல்லது நகைகளை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். விரைவாகப் பணம் சம்பாதிக்க நினைத்து தவறான திட்டங்களில் முதலீடு செய்யாதீர்கள். மாணவர்களுக்கு உகந்த நாள் இன்று.

ALSO READ | சனி பகவானின் நேரடி தாக்கம்: சிலருக்கு சோதனை, சிலருக்கு சாதனை

தனுசு: உங்கள் வழக்கத்தில் மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிக்கவும். பொழுதுபோக்கு அல்லது திறமைகளை மேம்படுத்த முயற்சி செய்தால் பலன் கிடைக்கும். புதிய வேலைகளைத் தொடங்க மன உறுதி ஏற்படும். நிதி சார்ந்த வேலைகளில் கவனம் செலுத்துவதால் மனம் அமைதியாக இருக்கும். தொழில் தொடர்பான கவலைகள் தொடரும்.  

மகரம்: இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். வருமானத்தை அதிகரிக்க சில நல்ல வாய்ப்புகளையும் பெறலாம். உங்கள் நேர்மறையான நடத்தையை குடும்பத்தினர் பாராட்டுவார்கள்.  

கும்பம்: சிறிய விஷயங்களுக்கு கோபப்படுவதை தவிர்க்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய உங்கள் சிந்தனை மாறலாம். ஆன்லைனில் வணிகம் செய்பவர்கள், வணிகத்தை அதிகரிக்க புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். திட்டமிட்டதை செயலாக்க சரியான நேரம் இது.

மீனம்: செவ்வாய் கிழமை பலருடன் பேச வாய்ப்புக் கிடைக்கும், இது மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மூத்தவர்களுடன் பணிபுரியும் வாய்ப்பை இழக்காதீர்கள், கற்றுக் கொள்வதற்கான நள் இது. வணிகர்கள் மிகவும் கவனமாக வேலை செய்ய வேண்டிய நாள் இது என்றாலும், நிதி விவகாரங்கள் சாதகமாகத் தீர்க்கப்படும்.

READ ALSO | மூன்றாம் உலகப்போர் 2022ல் வரும்! -நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News