உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும், பணமும் பல்கி பெருக வேண்டுமா? இதை தவறாமல் கடைபிடியுங்கள்

Gajalakshmi Puja, Vastu tips : கடன் காரணமாக மகிழ்ச்சி இல்லாமல் இருந்தால் உங்கள் வீட்டில் ஐராவத யானையுடன் இருக்கும் கஜலக்ஷ்மி தேவியை வழிபட்டால் இந்த பிரச்சனை எல்லாம் விட்டு விலகி ஓடிவிடும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 28, 2024, 08:52 AM IST
  • வீட்டில் கடன் தொல்லை நீங்க வேண்டுமா?
  • கஜலட்சுமி பூஜையை தவறாமல் செய்யவும்
  • இந்த வாஸ்து குறிப்புகளை பின்பற்றுங்கள்
உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும், பணமும் பல்கி பெருக வேண்டுமா? இதை தவறாமல் கடைபிடியுங்கள் title=

Gajalakshmi Puja, Vastu tips : வீட்டில் மகிழ்ச்சி இருக்க வேண்டும் என்றால் வாஸ்து அமைப்புகள் சரியாக இருக்க வேண்டும். இதன் மூலம் நேர்மறை ஆற்றல் அதிகரித்து வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரித்து பிரச்சனைகள் எல்லாம் குறையும். அதனால் வாஸ்து அமைப்பு பூஜை அறையில் இருந்தே தொடங்குகிறது. வீட்டில் இருக்கும் தெய்வங்களின் சிலைகள் மற்றும் படங்களை சரியான திசையில் வைப்பது மிகவும் முக்கியம். செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவியின் சிலை அல்லது படத்தை வைப்பதில் வாஸ்து விதிகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம். 

கடன் பிரச்சனையில் இருப்பவர்கள் வீட்டில் கஜலட்சுமியின் படத்தை வைத்து வழிபடுவது மிகவும் பலன் தரும். ஏனென்றால், லட்சுமி தேவியின் வழிபாடு ஆரோக்கியம், மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியை அளிப்பதாக கருதப்படுகிறது. அந்தவகையில், கஜலட்சுமி படம் தொடர்பான வாஸ்து குறிப்புகளை தெரிந்து கொள்வோம்...

கடனை நீக்கும் கஜலட்சுமி

செல்வத்தை அருளும் பெண் தெய்வம் லட்சுமி. ஐராவத யானையுடன் காட்சியளித்தால் அது கஜலட்சுமி. மகிழ்ச்சி மற்றும் செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுவதால் கஜலட்சுமியை வீட்டில் வைத்து வழிபடும்போது கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம். அத்துடன் வியாபாரத்தில் லாபமும் கிடைக்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வீட்டில் சரியான இடத்தில் கஜலட்சுமி படத்தை வைப்பது அவசியம்.

கஜலட்சுமியின் படத்தை எங்கே வைக்க வேண்டும்?

வாஸ்து விதிகளின்படி, கஜலட்சுமியின் படத்தை வீட்டின் வடகிழக்கில் அதாவது வடகிழக்கு மூலையில் அல்லது பூஜை அறையின் வலது பக்கத்தில் வைப்பது மிகவும் நல்ல பலன்களை வழங்குவதாக கருதப்படுகிறது. வீட்டின் வடகிழக்கு மூலை தெய்வீக ஸ்தலமாக கருதப்படுகிறது. இது தவிர, லட்சுமி தேவியின் இந்த வடிவத்தையும் வடக்கு திசையிலும் வைக்கலாம்.

கஜலட்சுமி வழிபாடு

கஜ லட்சுமி தாயாரை பெண்கள் ஆவணி தசமி திதி நாளன்று பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். ஆவணி மாதம் வளர்பிறை தசமி நாளில் இந்த வழிபாடு செய்ய சிறப்பானது. நிலம், வீடு, தோட்டம் போன்ற அசையாத சொத்துக்களை கொடுக்கும் கஜலக்ஷ்மி விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு எத்தகைய தீய எண்ணங்களும் ஒழிந்து போகும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News