Health News Tamil : உடலில் குறைந்த அளவு ஹீமோகுளோபின் இருப்பது இரத்த சோகையின் தீவிர அறிகுறியாகும். உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முதலில் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். இப்போது அதுவும் எளிமையாகிவிட்டது. அதாவது உங்கள் கையில் ஸ்மார்ட்போன் இருந்தாலே அதற்கான செயலி மூலம் ஹீமோகுளோபின் அளவை சரிபார்த்துக் கொள்ளலாம்.
ஹீமோகுளோபின் என்றால் என்ன?
ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஒரு புரதமாகும், இது உடலின் உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜனை வழங்க உதவுகிறது. அதன் குறைவு இரத்த சோகையின் அறிகுறியாக இருக்கலாம். ஆண்களில் ஹீமோகுளோபின் 13.5 g/dL க்கும் குறைவாகவும், பெண்களில் 12.0 g/dL க்கும் குறைவாகவும் இருப்பது இரத்த சோகையைக் குறிக்கிறது. குழந்தைகளில், இந்த மதிப்பு வயதுக்கு ஏற்ப மாறுபடலாம்.
மேலும் படிக்க | திருமண உறவை சீரழிக்கும் இந்த 3 விஷயங்கள்... பெண்கள் செய்யும் பெரிய தவறுகள்!
ஸ்மார்ட்போனில் ஹீமோகுளோபினை எவ்வாறு சரிபார்க்கலாம்?
இந்த புதிய தொழில்நுட்பம் எந்த ஊசியும் இல்லாமல் ரத்தம் எடுக்காமல் செயல்படுகிறது. இதில் ஸ்மார்ட்போன் ஆப் மூலம் விரல் நகங்களை படம் எடுக்க வேண்டும். புகைப்படத்தில் உள்ள நகத்தின் கீழ் உள்ள பகுதியின் நிறத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் செயலி ஹீமோகுளோபின் அளவை மதிப்பிடுகிறது.
செயலி எப்போது செயல்பாட்டுக்கு வரும்?
இந்த தொழில்நுட்பம் இன்னும் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் உள்ளது, ஆனால் எதிர்காலத்தில் இது இரத்த சோகை போன்ற நோய்களைக் கண்டறிவதை மிகவும் எளிதாக்கும். குறிப்பாக மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இது பயனளிக்கும். முன்பெல்லாம் மருத்துவமனைக்கு சென்று ஒவ்வொரு டெஸ்டுக்கும் மணிக்கணக்கில் காத்திருந்து, பல நூறு ரூபாய்கள் செலவழித்து ரிசல்ட்டை பெற வேண்டியிருக்கும். அவையெல்லாம் மிகமிக எளிதாகிவிட்டது. அதாவது ஒரே ஒரு செயலி இருந்தால்போதும் ரத்தம் ஒருசொட்டுகூட கொடுக்காமல் இந்த ரிசல்டுகளின் முடிவுகளை பெற்றுக் கொள்ளலாம். அந்தளவுக்கு விஞ்ஞானமும் மருத்துவத்துறையும் வளர்ந்துவிட்டது.
ஹீமோகுளோபின் அதிகரிக்க
ஹீமோகுளோபின் அதிகரிக்க தினமும் கீரைகள் மற்றும் புடலங்காய் சாறு சாப்பிட வேண்டும். பீட்ரூட் சாறு தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது ரத்தத்தில் ரத்த சிவப்பணுகள் எண்ணிக்கையை அதிகரிக்கும். அதேபோல் மாதுளை, ஆப்பிள், எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றையும் அன்றாட உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும். அத்துடன், மருத்துவரின் ஆலோசனையை தவறாமல் பின்பற்ற வேண்டும். அதுவே ரத்தச்சோகை பிரச்சனையில் இருந்து மீண்டு வர உதவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ