போலி மதுபானம் வாங்குகிறோம் என்று சந்தேகமா? இந்த வழிகளை பின்பற்றுங்கள்!

பொருட்களில் கலப்படம் செய்வது போல மதுவிலும் கலப்படம் செய்யப்பட்டு போலி மது விற்கப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Oct 13, 2022, 10:24 AM IST
  • மதுபானங்களில் கலப்படம் அதிகரித்து வருகிறது.
  • பல இடங்களில் போலி மதுபான்களும் விற்பனை செய்யப்படுகிறது.
  • இவை உடலுக்கு பல்வேறு தீங்குகளை ஏற்படுத்துகிறது.
போலி மதுபானம் வாங்குகிறோம் என்று சந்தேகமா? இந்த வழிகளை பின்பற்றுங்கள்! title=

பண்டிகை காலம், விடுமுறை நாட்கள் அல்லதை ஏதேனும் நிகழ்ச்சிகளில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஒன்றுகூடுவது ஒரு அற்புதமான உணர்வை தரும்.  அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவது, மது அருந்துவது என கொண்டாட்டங்களுக்கு பஞ்சமே இருக்காது, இப்போதெல்லாம் பாரபட்சமின்றி இளம்வயதினர் தொடங்கி வயதானவர்கள் வரை மது அருந்த தொடங்கிவிட்டனர்.  மது சிலருக்கு மன அமைதியை தருவதாகவும் இருக்கிறது, சிலருக்கு பழைய நினைவுகளை மீட்டெடுத்து ஆறுதல் தரும் மருந்தாக என மது பல வகைகளில் வேலை செய்கிறது.  ஆனால் மது அதிகமாக அருந்துவது உடல்நலத்திற்கு நல்லதல்ல என்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும், அதிலும் போலியான மதுவை அருந்துவது ஆபத்தை ஏற்படுத்தும். பொருட்களில் கலப்படம் செய்வது போல மதுவிலும் கலப்படம் செய்யப்பட்டு போலி மது விற்கப்படுகிறது.  

மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

சாதாரண நாட்களை விடவும் பண்டிகை காலங்களில் போலி மதுக்கள் சந்தைகளில் களமிறங்கிவிடுகின்றன, போலி என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உண்மையான மதுவை போன்றே சுவை, பேக்கேஜிங் செய்யப்படுகிறது.  போலி மதுவில் ஆபத்து நிறைந்த பொருட்கள் கலக்கப்படுகிறது, அதனால் இதை குடிப்பதால் சில நேரம் மரணம் கூட ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.  கொஞ்சம் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் செயல்படுவதன் மூலம், இதுபோன்ற போலி மதுவினை அருந்தி உடல்நலம் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பித்து கொள்ளலாம், போலி மதுவிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

1) அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் மட்டுமே மதுபானங்கள் வாங்குவதை வழக்கமாக கொள்ளுங்கள், அங்கீகரிக்கப்படாத கடைகளையோ, மது விற்பனை செய்யும் அங்கீகரிக்கப்படாத நபர்களையோ நம்பி மதுபானங்களை வாங்க வேண்டாம். 

2) அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் இருந்து மதுபானங்கள் வாங்கும் போதும் கூட சில சமயங்களில் பேக்கேஜிங்கை சரிபார்ப்பது அவசியம்.  ஏனெனில் சில போலி மதுபானங்களை காப்பிகேட் பேக்கேஜிங்கில் விற்கிறார்கள், அதனால் உண்மையான மது என்று நாம் நம்பிவிடும் சூழ்நிலை ஏற்படுகிறது.  பேக்கேஜிங்கில் ஏதேனும் சேதம், லோகோவின் நிறங்கள் அல்லது அளவுகளில் மாற்றங்கள், மங்கலான லேபிள்கள், எழுத்துப் பிழைகள், தேதிகள் சரியாக தெரியாமல் இருக்கிறதா போன்றவற்றை சரிபார்க்கவும். 

3) பாட்டிலில் முத்திரை சரியாக உள்ளதா, ஏதேனும் சேதமடைந்துள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்,  பாட்டிலின் கழுத்தைச் சுற்றி பசை போன்ற ஒட்டும் தன்மை உள்ளதா என்று பார்க்கவும்.

4) கோவா மற்றும் மகாராஷ்டிராவைத் தவிர, இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் வரி முத்திரைகள் இடம்பெற்றிருக்கும்.  சில முத்திரைகள் தெளிவாக தெரியும், சில முத்திரைகள் தெரியாது, சில முத்திரைகள் தடயவியல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டிருக்கும். அதனால் மதுபாட்டில் வாங்கும்போது  முறையான வரி முத்திரை பாட்டிலில் இருப்பதை சரிப்பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | Health Tips: உடலுக்கு ஆக்ஸிஜனை அள்ளி வழங்கும் 'சில' பழங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News