குலாப் ஜமுனின் பெயரைக் கேட்டதும், பலரது வாயில் எச்சில் ஊர துவங்கிவிடும். காரணம் அத்துனை சுவை.
இந்த சுவை மிக்க குலாப் ஜமுன்களை நாம் பெரும்பாலும் கடைகளில் இருந்தே வாங்குகிறோம். கடைகளில் இருந்து வாங்கும் போது... ஏன் இதை நம் வீட்டில் செய்ய முடியாதா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கலாம். அப்படியெனில் உங்களுக்கான பதில் செய்யலாம் என்பது தாம்.
சரி., எப்படி செய்வது?... அதற்கும் விடை உண்டு. கீழே காணும் செய்முறையினை பின்பற்றினால், இந்த கேள்விக்கான பதிலை நீங்களே கண்டறிவீர்...
குலாப் ஜாமுன் செய்ய தேவையான பொருட்கள்
- கோகோ பவுடர் - 1/2 டீஸ்பூன்
- சாக்லேட் (நீர்ம தண்மையில்) - 1/2 டீஸ்பூன்
- பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
- மைதா - 3 தேக்கரண்டி
- வெண்ணெய் - 1/2 டீஸ்பூன்
- பால் பவுடர் (இனிக்காதது) - 1/5 கப்
- சர்க்கரை - 1/2 கப்
- ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி
- அரைத்த சாக்லேட் - 4 தேக்கரண்டி
- வறுக்க எண்ணெய் அல்லது நெய்
தயாரிக்கும் முறை: ஒரு கடாயில், சர்க்கரை மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும். சர்க்கரை பாகு தயாரான பிறகு, அதை ஒதுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், மைதா, சாக்லேட் பவுடர், கோகோ பவுடர் மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்க்கவும். பின்னர் அனைத்து பொருட்களையும் நன்றாக கலக்கவும்.
இப்போது இந்த கலவையின் மாவை சிறிது தண்ணீர் மற்றும் நெய்யைப் பயன்படுத்தி பிசையத் தொடங்குங்கள். நன்கு பிசைந்த பின்னர் மாவை சம பாகங்களாக பிரித்து ஒரு வட்ட பந்து தயாரிக்கவும். மையத்திலிருந்து பந்தைத் திறந்து சிறிது சாக்லேட் சேர்க்கவும். பின்னர் அதை நன்றாக மூடி மீண்டும் பந்துகளை உருவாக்கவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து இந்த பந்துகளை வறுக்கவும். அவை நன்றாக வறுக்கப்பட்ட பின்னர், அதை சிரப்பில் சேர்க்கவும். பந்துகளை சர்க்கரை பாகில் 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
அவ்வளவுதான் தற்போது உங்கள் சாக்லேட் குலாப் ஜமுன் தயாராக உள்ளது, சூடாக பரிமாறவும்.