வருகிறது காரடையான் நோன்பு! நோன்பு அடை செய்முறை!

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது தான் காரடையான் நோன்பு. கணவரின் ஆரோக்கியத்திற்காகவும் தீர்க்க ஆயுளுக்காகவும் செய்யப்படும் காரடையான் நோன்பு, 15.3.19 திங்கட்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது.

Last Updated : Mar 9, 2019, 02:47 PM IST
வருகிறது காரடையான் நோன்பு! நோன்பு அடை செய்முறை! title=

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது தான் காரடையான் நோன்பு. கணவரின் ஆரோக்கியத்திற்காகவும் தீர்க்க ஆயுளுக்காகவும் செய்யப்படும் காரடையான் நோன்பு, 15.3.19 திங்கட்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வர். இதனை சாவித்ரி நோம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோம்பினால் கணவனுடைய ஆயுளை அதிகரிக்கும் என ஐதீகம். கற்பில் சிறந்தவளான சாவித்திரி தன்னுடைய கணவனின் ஆயுள் காலம் முடிந்து யமதேவன் அவனுடைய உயிரைப் பரித்துச் சென்ற போதிலும், யமனுடனிமிருந்து மீட்டு வந்தாள் என்று நம்பப்படுகிறது. 

பெண்கள் காரடையான் நோன்புக்கு படைக்கவும், விரதம் முடிந்த பின்பு சாப்பிடவும் காரடையான் நோன்பு அடை செய்வார்கள். இனி காரடையான் நோன்பு இனிப்பு அடை செய்முறை பற்றிப் பார்ப்போம்.

"தேவையான பொருட்கள்" 

வறுத்த பச்சரிசி மாவு 1 கப், காராமணி 1/4 கப், தேங்காய் கீரியது அரை கப், வெல்லம் 1 கப், ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன், தண்ணீர் 2 கப்.

காராமணியை வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும். பின்னர் வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் கொதிக்கும்போது காராமணி, தேங்காய் துண்டுகள், ஏலப்பொடி சேர்க்கவும். 

வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டு நன்றாக கிளறவும். மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து அடைபோல் தட்டி வாழை இலையில் வைக்கவும். இதனை இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும். 

காரடையான் நோன்பு அடை ரெடி.

Trending News