இந்த 1 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்கள்தான் கோடீஸ்வரர்

ஆன்லைன் இணையதளத்தில் பழைய நோட்டுகளை ஏலம் எடுப்பதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம். இதில் ஒரு நோட்டில் ரூ.7 லட்சம் வரை ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 12, 2022, 03:32 PM IST
  • ஒரு ரூபாய் நோட்டுக்கு லட்சங்கள் கிடைக்கும்
  • நீங்கள் முதலீடு செய்ய வேண்டியதில்லை
  • 7 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்த நோட்டு சிறப்பானது
இந்த 1 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்கள்தான் கோடீஸ்வரர் title=

புதுடெல்லி: பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை சேகரிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உங்களின் இந்த சிறு பொழுது போக்கு உங்களை கோடீஸ்வரராக்கும். நீங்களும் வீட்டில் இருந்த படி லட்சக்கணக்கில் சம்பாதிக்க விரும்பினால், இதுவே உங்களுக்கு சிறந்த வாய்ப்பு. இந்த நோட்டு மற்றும் காசுகள் மூலம் வீட்டில் இருந்தபடி லட்சங்களில் சம்பாதிக்கலாம். இதற்காக நீங்கள் எந்த வகையிலும் முதலீடு செய்ய வேண்டியதில்லை. இந்த சிறப்பு வாய்ந்த ஒரு ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் போதும், இந்த அதற்கு சிறப்பு வாய்ந்த ஒரு ரூபாய் நோட்டுக்கு 7 லட்சம் ரூபாய் மிகவும் ஈசியாக கிடைக்கும்.

ஒரு நோட்டுக்கு லட்சக்கணக்கில் கிடைக்கும்
உண்மையில், பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய அரசு இந்த ஒரு ரூபாய் நோட்டை (Old Currency) நிறுத்தியது, ஆனால் ஜனவரி 2015 இல் அதன் அச்சிடுதல் மீண்டும் தொடங்கப்பட்டது, அதன் பிறகு இந்த நோட்டு (Old Rupees) சந்தையில் புதிய வடிவத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று நாம் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த ஒரு ரூபாய் நோட்டைப் பற்றி பேசுகிறோம், அதன் மூலம் நீங்கள் கோடீஸ்வரராகலாம்.

ALSO READ | ’ஒமிக்ரானை எதிர்கொள்ள ஆயத்தமாவோம்’ பிரதமர் மோடி உரை

இந்த நோட்டு ஏன் சிறப்பு வாய்ந்தது?
7 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்த நோட்டின் சிறப்பு என்னவென்றால், சுதந்திரத்திற்கு முன்பு இருந்த ஒரே நோட்டு இதுவாகும், அப்போதைய கவர்னர் ஜே.டபிள்யூ.கெல்லியின் கையெழுத்துடன் இந்த நோட்டு உள்ளது. இந்த நோட்டு 80 ஆண்டுகள் பழமையானது. இது 1935 இல் பிரிட்டிஷ் இந்தியாவால் வெளியிடப்பட்டது. இது தவிர 1966ம் ஆண்டு ஒரு ரூபாய் நோட்டின் மதிப்பு ரூ.45 ஆகும். அதே போல 1957 நோட்டு ரூ.57க்கு கிடைக்கிறது.

இந்த நோட்டுகளை இப்படித்தான் விற்க முடியும்
* உங்களிடம் இதுபோன்ற சிறப்பு நோட்டுகள் இருந்தால், அதை OLX இல் ஆன்லைனில் விற்கலாம்.
* இந்த இணையதளத்தில் இந்த அரிய நாணயத்திற்கு வாங்குபவர்கள் அதிக தொகையை செலுத்தி வருகின்றனர்.
* நாணயங்களை விற்க முதலில் உங்களை Olx இல் விற்பனையாளராக பதிவு செய்யுங்கள்.
* அதன் பிறகு, நாணயத்தின் இருபுறமும் உள்ள புகைப்படத்தை கிளிக் செய்து பதிவேற்றவும்.
* அதன் பிறகு உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்.
* இணையதளத்தில் நீங்கள் வழங்கிய தகவலைச் சரிபார்க்கவும்.
* இந்த நோட்டை வாங்க விரும்பும் எவரும் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.

ALSO READ | வெறும் ஆயிரம் ரூபாய்க்கு 32 இன்ச் Smart TV வாங்க அரிய வாய்ப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News