Child Aadhaar: உங்கள் குழந்தைக்கு ஆதார் அட்டை செய்ய வேண்டுமா? முக்கிய குறிப்புகள் இதோ!!

5 வயதிற்குட்பட்ட குழந்தைக்கு ஆதார் அட்டை செய்யப்பட்டால், அதில் பயோமெட்ரிக் மாற்றங்கள் இரண்டு முறை செய்யப்பட வேண்டும் என்பதை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 20, 2021, 08:49 PM IST
  • உங்கள் குழந்தைக்கு 5 வயதாகும் போது, அவரது பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிப்பது கட்டாயமாகும்.
  • 5 வயதிற்கு முன்னர் ஆதார் அட்டை செய்யப்படும் குழந்தைகளின் பயோமெட்ரிக்ஸ், அதாவது கைரேகைகள் மற்றும் கண்களில் போதுமான வளர்ச்சி இருப்பதில்லை.
  • குழந்தைகளின் ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிப்பது முற்றிலும் இலவசமாகும்.
Child Aadhaar: உங்கள் குழந்தைக்கு ஆதார் அட்டை செய்ய வேண்டுமா? முக்கிய குறிப்புகள் இதோ!!  title=

Mandatory Biometric Update of Child Aadhaar: ஆதார் அட்டை இந்திய குடிமக்களுக்கு அவசியமான, பயனுள்ள ஆவணமாகும். ஆதார் அட்டையை வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம்  (UIDAI) புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் ஆதார் அட்டைகளையும் வழங்குகிறது.

ஆனால், 5 வயதிற்குட்பட்ட குழந்தைக்கு ஆதார் அட்டை செய்யப்பட்டால், அதில் பயோமெட்ரிக் மாற்றங்கள் இரண்டு முறை செய்யப்பட வேண்டும் என்பதை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த புதுப்பிப்பு 5 வயதில் ஒரு முறையும், 15 ஆவது வயதில் ஒரு முறையும் செய்யப்பட வேண்டும். இந்த புதுப்பிப்பு கட்டாயமானதாகும்.

கார்டுகளை ஆதார் சேவை மையங்களில் பெறலாம்

UIDAI-ன் படி, பெற்றோர்கள் ஆதார் சேவை மையங்களில் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் அல்லது மருத்துவமனையால் வழங்கப்பட்ட டிஸ்சார்ஜ் கார்டை காட்டி, அதன் மூலம் குழந்தையின் ஆதார் அட்டையைப் பெற முடியும். 

5 மற்றும் 15 வயதில் மாற்றங்களை செய்யலாம்

UIDAI இன் படி, உங்கள் குழந்தைக்கு 5 வயதாகும் போது, அவரது பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிப்பது கட்டாயமாகும். அதேபோல், குழந்தைக்கு 15 வயதாகும்போதும், பயோமெட்ரிக் விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். 

ALSO READ: ஆதார் பற்றிய சந்தேகங்களா? அனைத்துக்கும் இங்கே விடை கிடைக்கும்: UIDAI அளித்த புதிய வசதி

5 மற்றும் 15 வயதில் புதுப்பிக்க வேண்டிய அவசியம் என்ன?

5 வயதிற்கு முன்னர் ஆதார் அட்டை (Aadhaar Card) செய்யப்படும் குழந்தைகளின் பயோமெட்ரிக்ஸ், அதாவது கைரேகைகள் மற்றும் கண்களில் போதுமான வளர்ச்சி இருப்பதில்லை. ஆகையால், அத்தகைய சிறு குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறப்படும்போது ​​அவர்களின் பயோமெட்ரிக் விவரங்கள் எடுக்கப்படுவதில்லை. எனவே, UIDAI-ஐ 5 வயதில் புதுப்பிக்க வேண்டியது அவசியம். இதேபோல், ஒரு குழந்தை இளமை பருவத்தில் நுழையும் போது, ​​அவரது பயோமெட்ரிக் அளவுருக்களில் மாற்றங்கள் ஏற்படும். எனவே, யுஐடிஏஐ மீண்டும் 15 வயதில் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வளவு செலவாகும்?

UIDAI இன் படி, குழந்தைகளின் ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிப்பது முற்றிலும் இலவசமாகும். நீங்கள் ஒரு ரூபாய் கூட இதற்கு செலவிட வேண்டியதில்லை. மேலும், நீங்கள் விவரம் புதுப்பிப்புக்கச் செல்லும் போதெல்லாம், எந்த வகையான ஆவணத்தையும் கொடுக்க வேண்டியதில்லை. பெற்றோர்கள் தங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு (Aadhaar Centre) சென்று குழந்தையின் ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்கலாம். உங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்தின் தகவல்களை UIDAI வலைத்தளத்திலிருந்து பெறலாம்.

ALSO READ: MAadhaar App இல் இத்தனை நன்மைகளா? 35 சேவைகளின் பலனைப் பெறலாம்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான 

செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News