கால்நடைகளுக்கு விளைச்சல் பயிர்களை உணவாக அளிக்கும் விவசாயிகள்...

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கோடிக்கணக்கான இந்தியர்கள் வீட்டில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சில கால்நடைகள் ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ரோக்கோலியை உணவாய் உட்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.

Last Updated : Apr 2, 2020, 04:17 PM IST
கால்நடைகளுக்கு விளைச்சல் பயிர்களை உணவாக அளிக்கும் விவசாயிகள்... title=

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கோடிக்கணக்கான இந்தியர்கள் வீட்டில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சில கால்நடைகள் ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ரோக்கோலியை உணவாய் உட்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.

மூன்று வார முழு அடைப்பு காரணமாக விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை நகரங்களுக்கு கொண்டு செல்லவும் விற்கவும் சிரமப்படுகிறார்கள். இத்தகைய சூழலில் தங்கள் பண்ணையில் விளைந்த உயர் தர பொருட்களையும் தங்கள் கால்நடைகளுக்கு அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். 

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் மில்லியன் கணக்கான விவசாயிகளை திடீரென வீழ்த்துவது சாதாரண விஷயம் இல்லை. இதற்கு காரணம் கொடி கொரோனா வைரஸ், இந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் 2000-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. மேலும் 60 பேர் உயிரை பலிவாங்கியுள்ளது.

இதுகுறித்து விவசாயி அனில் சலுங்கே தெரிவிக்கையில்., "சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐஸ்கிரீம் உற்பத்தியாளர்கள் ஸ்ட்ராபெர்ரிகளை முக்கியமாக வாங்குபவர்கள், ஆனால் இப்போது சுற்றுலாப் பயணிகள் யாரும் இல்லை" என்று குறிப்பிடுகின்றார். தனது இரண்டு ஏக்கர் பண்ணையில் வளர்க்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரிகளை மும்பைக்கு கொண்டு செல்ல இயலாத நிலையில் தனது நிலத்தில் விளைந்த ஸ்ட்ராபெர்ரிகளை தனது மாடுகளுக்கு உணவளித்தார் இந்த ஏழை விவசாயி.

தனது நிலத்தில் விளைந்த ஸ்ட்ராபெர்ரிகள் தனக்கு ரூ.8 லட்சம் வரை அளிக்கும் என அவர் நம்பினார், ஆனால் இப்போது தனது 2.5 லட்சம் உற்பத்தி செலவை கூட அவரால் மீட்டெடுக்க முடியவில்லை. 

அதேவேளையில் பெங்களூருவுக்கு அருகில் உள்ள முனிஷாமப்பா பகுதியை சேந்த விவசாயி 15 டன் திராட்சைகளை விற்கத் தவறியதால் அருகிலுள்ள காட்டில் கொட்டியுள்ளார், அவர் தனது பயிருக்கு ரூ.5 லட்சம் செலவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே அருகிலுள்ள கிராமவாசிகளிடம் தனது பழங்களை இலவசமாக சேகரிக்க வருமாறு அவர் கேட்டுக் கொண்டார் எனவும், ஆனால் ஊரடக்கு உத்தரவு காரணமாக அவரது பழத்தை வாங்க யாரும் வரவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News