பயணிகள் கவனத்திற்கு; இரவு நேர ரயில் பயணத்தில் புதிய ரூல்ஸ்

Indian Railway Rules: இந்திய இரயில்வேயின் இந்த விதிகள் உங்களுக்குத் தெரியாவிட்டால், அவற்றைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 14, 2022, 06:19 AM IST
  • பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு முக்கிய முடிவு.
  • இந்தியன் ரயில்வே சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
  • இந்திய ரயில்வேயின் 5 அடிப்படை விதிகளை அறிக.
பயணிகள் கவனத்திற்கு; இரவு நேர ரயில் பயணத்தில் புதிய ரூல்ஸ் title=

மாறிவரும் காலத்திற்கு ஏற்ப, பயணிகளுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்க ரயில்வே முயற்சித்து வருகிறது. அதன்படி நீங்கள் ரயிலில் பயணம் மேற்கொள்பவராக இருந்தால், கண்டிப்பாக இந்த குறிப்பிட்ட புதிய ரூல்ஸ்களை தெரிந்துவைத்திருப்பது அவசியமாகும், ஏனெனில் நீங்கள் செய்யும் சிறிய தவறும், மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தலாம்.

அதன்படி பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, இந்தியன் ரயில்வே சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, இரவு நேர ரயில் பயணம் மேற்கொள்பவருக்காக தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வேயின் இந்த விதிகளைப் பின்பற்றுவது அவசியமாகும். அப்படி செய்யாவிட்டால் உங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படலாம். எனவே இந்த புதிய விதிகளின் முழு விவரத்தை இங்கே காண்போம்.

மேலும் படிக்க | சென்னை மெட்ரோ ரயிலில் பணிபுரிய வேலைவாய்ப்பு!

இந்திய ரயில்வேயின் 5 அடிப்படை விதிகளை அறிக

நீங்கள் மூன்று அடுக்கு பெட்டியில் பயணம் செய்தால், நடுத்தர பெர்த்தில் உள்ளவர்களுக்கு தான் மிகப்பெரிய பிரச்சனையாகும். கீழ் பெர்த்தில் பயணிகள் இரவு வெகுநேரம் வரை அமர்ந்திருப்பதால், நடுத்தர இருக்கையை திறக்க முடிவதில்லை. அதன்படி தற்போது ரயில்வே விதிகளின்படி, இரவு நேர ரயில் பயணிகள் இரவு 10 மணிக்கு மேல் எந்த பயணியும் சத்தமாகப் பேசவோ, சத்தமாக இசையை மொபைலில் கேட்கவோ கூடாது.

இரவில் நைட் லாம்ப் தவிர மற்ற அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும். இதனால் சக பயணிகளின் தூக்கம் கெடாமல் இருக்கும். அத்துடன் குழுவாகப் பயணிக்கும் பயணிகள் இரயிலில் வெகுநேரம் வரை பேச முடியாது. இந்த விதிகளை மீறினால் சக பயணிகளின் பெயரில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கலாம். மேலும் பயணிகள் தங்களுக்கு அசௌகரியமாக இருப்பதாக புகார் அளித்தால் உடனே ரயில்வே போலீசார்,டிக்கெட் பரிசோதகர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு ரயில்வே ஊழியர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் புதிய விதிமுறைகளிம் படி முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட ஒற்றைப் பெண்களுக்கு ரயில்வே ஊழியர்கள் உடனடி உதவி வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த புதிய விதிமுறைகள் உடனே அமல்படுத்தப்படும் என்று இந்திய ரயில்வே கூறியுள்ளதால், பயணிகள் இரவு நேரத்தில் பயணிக்கும் போது மற்ற பயணிகளுக்குத் தொந்தரவு ஏற்படுத்தும் எந்த விஷயத்தையும் செய்ய வேண்டாம் என்று அறிவுரைக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | Indian Railways: அப்பாடா, இனி டிக்கெட் முன்பதிவின் போது இதை செய்ய வேண்டாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News