இரவு நேர இரயில் பயணத்தில் இதைச் செய்தால் சிக்கல்தான், உஷாரா இருங்க பயணிகளே

Indian Railway Night Rules:  இரவுப் பயணம் தொடர்பாக இரயில்வே புதிய விதிமுறைகளை வழங்கியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 24, 2022, 08:39 AM IST
  • இரவில் மொபைலில் சத்தமாக பாடல்கள் கேட்ட முடியாது
  • இரவு நேர பயணிகள் இந்த விதிமீறல்களைச் செய்ய வேண்டாம்
  • இரயில்வே புதிய விதிமுறை
இரவு நேர இரயில் பயணத்தில் இதைச் செய்தால் சிக்கல்தான், உஷாரா இருங்க பயணிகளே title=

இந்திய இரயில்வே நாட்டின் வாழ்க்கை பாதை என்று அழைக்கப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களும் இரயிலில் பயணம் செய்கின்றனர். இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான இரயில்கள் தினசரி லட்சக்கணக்கான பயணிகளை தங்கள் இலக்குக்கு ஏற்றிச் செல்கின்றன. நீண்ட தூர இரயில்களில் பலர் பயணிக்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் சிலர் இரயிலில் ரயிலில் சத்தம் போடுவது அடிக்கடி காணப்படுகின்றது. இதனால் மற்ற பயணிகளின் தூக்கம் கலைகிறது அத்துடன் இன்னல்களை சந்திக்கின்றனர். 

இந்த நிலையில் தற்போது இரயில்வே அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும், மேலும் இது தொடர்பாக இரயில்வேயின் சில புதிய விதிகளை வழங்கியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | ராமாயண பக்தி சுற்றுலா ரயில் துவக்கம்: 65000 கட்டணம்: 18 நாட்கள் பயணம்

இரவில் மொபைலில் சத்தமாக பாடல்கள் கேட்ட முடியாது
இந்திய இரயில்வே விதிகளின்படி, இரயிலில் பயணம் செய்யும் போது, ​​இரவு 10 மணிக்கு மேல், எந்தப் பயணியும் மொபைல் போனில் சத்தமாக பேச முடியாது. இது தவிர லவுட் ஸ்பீக்கரில் பாடல்களைக் கேட்பதற்கும் தடை விதிக்கப்படும். அதன்படி இரவில் யாரேனும் சக பயணிகளின் தூக்கத்தை கெடுத்தால் அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படலாம்.

இரவில், இரவு விளக்கு தவிர மற்ற அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும்.
இது தவிர இரயிலில் பயணிகள் நிம்மதியாக உறங்குவதற்காக இரவு விளக்கு தவிர மற்ற அனைத்து விளக்குகளும் அணைக்கப்படும். மேலும், குழுவாக பயணிக்கும் பயணிகளால் இரவில் சத்தமாக பேச முடியாது. அதன்படி இந்த விதிகளை மீறினால் சக பயணிகளின் பெயரில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கலாம். அதேபோல் இரயில்வேயின் கூற்றுப்படி, சோதனை ஊழியர்கள், ஆர்பிஎஃப், எலக்ட்ரீஷியன், கேட்டரிங் ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் இரவில் அமைதியாக வேலை செய்ய வேண்டும்.

மேலும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட ஒற்றைப் பெண்களுக்கு இரயில்வே ஊழியர்கள் உடனடி உதவி வழங்க வேண்டும் என்று புதிய விதிமுறைகள் கூறுகிறது.

இரவு நேர பயணிகள் இந்த விதிமீறல்களைச் செய்ய வேண்டாம் 
இந்த புதிய விதிமுறைகள் உடனே அமல்படுத்தப்படும் என்று இந்திய இரயில்வே கூறியுள்ளதால், பயணிகள் இரவு நேரத்தில் பயணிக்கும் போது மற்ற பயணிகளுக்குத் தொந்தரவு ஏற்படுத்தும் எந்த விஷயத்தையும் செய்ய வேண்டாம் என்று அறிவுரைக்கப்படுகிறது. மேலும் இந்த தகவலை இரயில் பயனர்கள் அனைவரும் பின்பற்றும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க | IRCTCயின் ஸ்ரீ ராமாயண் யாத்ரா ரயிலுக்கு அமோக வரவேற்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News