விரைவில் தண்டவாளங்களில் ஹைட்ரஜன் ரயில்... ரயில்வே அமைச்சகம் அளித்த முக்கிய தகவல்!

 உலக நாடுகள் புவி வெப்பமயமாதலை தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவும் அதை நோக்கிய ஒரு முக்கிய முயற்சியாக விரைவில், சுற்று சூழலுக்கு உகந்த வகையில் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நோக்கத்துடன் ஹைட்ரஜன் ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 29, 2023, 12:39 PM IST
  • ரயில்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் துகள்கள் ஆகியவை பூஜ்ஜியம் ஆகி விடும்.
  • முன்னோடித் திட்டத்தின் வெற்றியானது முழு இரயில்வேத் துறையிலும் புரட்சியை ஏற்படுத்தக்கூடும்.
  • "Hydrogen for Heritage" முன்முயற்சியுடன், இந்திய ரயில்வே புதுமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்திற்கு மாறுகிறது.
விரைவில் தண்டவாளங்களில் ஹைட்ரஜன் ரயில்... ரயில்வே அமைச்சகம் அளித்த முக்கிய தகவல்! title=

பஸ், கார், விமானம் என எத்தனை விதமான போக்குவரத்து வசதிகள் வந்தாலும், என்றும் இனிமையானது ரயில் பயணம். ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட போது நீராவி மூலம் இயங்கி வந்த ரயில்கள், இப்போது டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கி வருவது அனைவரும் அறிந்ததே. டீசல் மற்றும் மின்சாரப் பயன்பாட்டால் உலகையே புவி வெப்பமயமாதல் அச்சுறுத்தி வருகிறது . இந்நிலையில், உலக நாடுகள் புவி வெப்பமயமாதலை தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவும் அதை நோக்கிய ஒரு முக்கிய முயற்சியாக விரைவில், சுற்று சூழலுக்கு உகந்த வகையில் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நோக்கத்துடன், 'Hydrogen for Heritage' திட்டத்தின் கீழ்  35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. டீசல் என்ஜின்களுக்கு மாற்றாக ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை இணைத்து ரயில்வே துறையில் புரட்சியை ஏற்படுத்த ஹைட்ரஜன் ஃபார் ஹெரிடேஜ் திட்டம் நோக்கமாக உள்ளது. சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கத்துடன் தூய்மையான எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்த இந்தத் திட்டம் ஊக்குவிக்கிறது.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மாநிலங்கள் அவையில், ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த திட்டத்தை உறுதிப்படுத்தினார். இதன் முன்னோடித் திட்டம், வடக்கு ரயில்வேயின் ஜிண்ட்-சோனிபட் பிரிவில் கள சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று கூறினார். தொடக்கத்தில் ஒரு ரயிலுக்கு ரூ.80 கோடியும், தரைவழி உள்கட்டமைப்பிற்காக ரூ.70 கோடியும் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  இந்தத் திட்டம்,  ரயில்வே துறையின் குறிப்பிடத்தக்க முதலீடாக இருக்கும். தற்போதுள்ள டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் (DEMU) ரயில்களில், ஹைட்ரஜன் எரிபொருள் கலத்தை பொருத்துவதற்காக, இந்திய ரயில்வே ரூ.111.83 கோடி மதிப்பிலான முன்னோடி திட்டத்தை வழங்கியுள்ளதாக வைஷ்ணவ் மேலும் தெரிவித்தார். இந்த முன்னோடித் திட்டம் வடக்கு ரயில்வேயின் ஜிந்த்-சோனிபட் பிரிவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்களை இயக்குவதற்கான ஆரம்ப செலவுகள்  அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், சுற்று சூழலுக்கு உகந்த மாற்று எரிபொருளில் இயங்கும் இந்த ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, திட்டமிடப்பட்ட செலவு குறையும் எனவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ஹைட்ரஜனை எரிபொருளாக அறிமுகப்படுத்துவது பசுமை போக்குவரத்து தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குவது மட்டுமல்லாமல், இந்தியாவின் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்குகளை சீரமைக்கும்.

மேலும் படிக்க | ரயிலா இல்லை... 5 ஸ்டார் ஹோட்டலா... இந்திய ரயில்வேயின் ‘சில’ ஆடம்பர ரயில்கள்!

டீசல் என்ஜின்களுக்குப் பதிலாக ஹைட்ரஜன் எரிபொருள் செல்களைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த ரயில்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் துகள்கள் ஆகியவை பூஜ்ஜியம் ஆகி விடும். மேலும் அவை சுற்றுச்சூழலுக்கு உகந்த ரயில்களாக அமைகின்றன. ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்களின் அறிமுகம் தூய்மையான பசுமையான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும்.

இந்திய ரயில்வே, 100 சதவீத மின்மயமாக்கலை அடைவதில் கவனம் செலுத்தி, உறுதியான நடைமுறைகளைப் பின்தொடர்வதில் உறுதியாக உள்ளது. ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்களின் அறிமுகம் கார்பன் உமிழ்வை கணிசமாகக் குறைக்க உதவும்.

ஹைட்ரஜன் ரயில் சோதனைகள் மார்ச் 2024 இல் தொடங்க உள்ளதாக கூறிய, வடக்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஷோபன் சவுத்ரி, இந்த முயற்சி நல்ல நிலையில் இருப்பதாக உறுதியளித்தார். இந்த  முன்னோடித் திட்டத்தின் வெற்றியானது முழு இரயில்வேத் துறையிலும் புரட்சியை ஏற்படுத்தக்கூடும். மேலும் மற்ற தொழில்துறைகளையும் இதேபோன்ற சுத்தமான எரிசக்தி தீர்வுகளை ஆராய ஊக்குவிக்கும்.

மேலும் படிக்க | மிக நீநீநீநீண்ட தூர ரயில் வழித்தடங்கள்! போய் சேர பல நாட்கள் ஆகும்!

"Hydrogen for Heritage" முன்முயற்சியுடன், இந்திய ரயில்வே புதுமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களைத் தழுவுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்து வருகிறது. ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை ரயில்களை பயன்படுத்துவதன் மூலம், ரயில்வே பசுமையான சூழலை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாடு முழுவதிலும் ஒரு முன்மாதிரியையும் அமைக்கிறது.

கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் இந்திய ரயில்வேயின் அர்ப்பணிப்பு, அடுத்த தலைமுறைக்கு தூய்மையான மற்றும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதியை எடுத்துக்காட்டுகிறது. ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்களை செயல்படுத்துவதன் மூலம், இந்தியாவில் உள்ள இரயில்வே நெட்வொர்க் உலகளவில் சுற்றுச்சூழலை பாதிக்காத போக்குவரத்திற்கு ஒரு முன்மாதிரியாக மாறும் திறனைக் கொண்டுள்ளது. மேலும் நிலையான மற்றும் சுற்றுச்சூழல் நட்பு எதிர்காலத்தை நோக்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்கிறது.

மேலும் படிக்க | ரயிலில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியும் தெரிந்து கொள்ள வேண்டிய ‘7’ விதிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News