Taj Mahal நுழைவுகட்டண விலை அதிரடி உயர்வு; பயணிகள் அதிர்ச்சி!

தாஜ் மஹாலில் உள்ள முக்கிய கல்லறை பார்க்க விரும்பும் நபர்கள் வரும் திங்கட்கிழமையிலிருந்து 200 ரூபாய் மதிப்புள்ள கூடுதல் டிக்கெட் வாங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

Last Updated : Dec 10, 2018, 11:02 AM IST
Taj Mahal நுழைவுகட்டண விலை அதிரடி உயர்வு; பயணிகள் அதிர்ச்சி! title=

தாஜ் மஹாலில் உள்ள முக்கிய கல்லறை பார்க்க விரும்பும் நபர்கள் வரும் திங்கட்கிழமையிலிருந்து 200 ரூபாய் மதிப்புள்ள கூடுதல் டிக்கெட் வாங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

இதுகுறித்து ஆக்ராவிலுள்ள இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் தொல்பொருள் ஆய்வுக் குழு தலைமை அதிகாரி வசந்த் ஸ்வரர்நகர் கூறுகையில்...  17-வது நூற்றாண்டு நினைவுச்சின்னத்தில் பிரதான சின்னமான தாஜ்மஹாலினை இனி உள்நாட்டு பயணிகள் பார்வையிட 250 ரூயாய் செலுத்த வேண்டும், வெளிநாட்டு பயணிகள் பார்வையிட 1,300 செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலையேற்றம் ஆனது இந்த ஆண்டில் இரண்டாவது முறை உயர்த்தப்படும் விலை ஆகும். முன்னதாக உள்நாட்ட்உ பயணிகளுக்கு 40-ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது ஷாஜகான் மற்றும் மும்தாஜ் கல்லறையினை பார்க்க விரும்புவோர்கள் கூடுதலாக 200 ரூபாயினை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய டிக்கெட் முறை பார்வையாளர்களை அடர்த்தியை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக பாதுகாப்பு அம்சம் சற்று நேர்த்தியாக கடைப்பிடிக்கப் படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

1983-ஆம் ஆண்டில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட தாஜ் மஹாலினை பார்வையிட தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துச்செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News