450+ ரயில்கள்... 23 நடைமேடைகள்... இந்தியாவின் 5 பெரிய ரயில் நிலையங்கள்!

இந்திய இரயில்வே உலகின் நான்காவது பெரிய இரயில் வலையமைப்பு ஆகும், ஆனால் சில விஷயங்களில் அது உலகை விட முன்னணியில் உள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 26, 2023, 04:40 PM IST
  • நாட்டின் மிகப்பெரிய ரயில் நிலையங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • இந்திய இரயில்வே உலகின் நான்காவது பெரிய இரயில் வலையமைப்பு.
  • புது தில்லி ரயில் நிலையம் வட இந்தியாவில் மிகவும் பரபரப்பான ரயில் நிலையம் ஆகும்.
450+  ரயில்கள்... 23 நடைமேடைகள்... இந்தியாவின் 5 பெரிய ரயில் நிலையங்கள்! title=

ரயில் இல்லாமல் இந்தியாவில் பயணம் செய்வதை கற்பனை செய்து பார்க்க முடியாது, ஏனெனில் இது பொதுப் போக்குவரத்தின் மிகப் முக்கிய வழிமுறையாகும். ஒரு மதிப்பீட்டின்படி, நாட்டில் தினசரி 13,169 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன, இதில் 2 கோடியே 40 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள், எனவே ரயில் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படுகிறது. இந்த 13,169 ரயில்கள் நாடு முழுவதும் சுமார் 7325 நிலையங்களை உள்ளடக்கியது. இந்த ரயில் நிலையங்களில் 5 பெரிய ரயில் நிலையங்கள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா?

இந்திய இரயில்வே உலகின் நான்காவது பெரிய இரயில் வலையமைப்பு ஆகும், ஆனால் சில விஷயங்களில் அது உலகை விட முன்னணியில் உள்ளது. குறிப்பாக அதன் முக்கிய பெரிய ரயில் நிலையம் நடைமேடையை பொறுத்தவரை, இந்தியா ரயில்வே உலகின் மிக நீளமான ரயில் நடைமேடை கொண்ட பட்டத்தை கொண்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய ரயில் நிலையங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்

கொல்கத்தா ஹவுரா ரயில்வே சந்திப்பின் பெருமை

இந்தியாவின் மிகப்பெரிய ஹவுரா ரயில் நிலையம் மேற்கு வங்கத்தில் அமைந்துள்ளது. ஹவுரா ரயில் சந்திப்பு கொல்கத்தாவின் பெருமை என்று அழைக்கப்படுகிறது. இங்கு 23 நடைமேடைகளும், 26 ரயில் பாதைகளும் உள்ளன. இந்த நிலையத்தின் வழியாக தினமும் 360 பயணிகள் ரயில்களும், ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து தினமும் 133 ரயில்களும் இயக்கப்படுகின்றன.

சீல்டா ராயில் நிலையம்

சீல்டா ரயில் நிலையம் இந்தியாவின் இரண்டாவது பெரிய ரயில் நிலையம் என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் நிறுவப்பட்டு 158 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. சீல்டா ரயில் நிலையத்திலிருந்து தினமும் 320 ரயில்கள் செல்கின்றன, சுமார் 12 லட்சம் பயணிகள் அவற்றின் வழியாக பயணிக்கின்றனர். இவற்றில் 39 ரயில்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. இந்த ரயில் நிலையத்தில் மொத்தம் 27 தடங்கள் மற்றும் 21 நடைமேடைகள் உள்ளன.

மும்பை சிஎஸ்டியின் பெருமை

மும்பையில் அமைந்துள்ள சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் இந்திய ரயில்வேயின் பெருமைக்குரியது. இந்த பிரமாண்டமான நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் விக்டோரியா டெர்மினஸ் என்று அழைக்கப்பட்டது. மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸில் இருந்து தினமும் 30 பயணிகள் ரயில்கள் செல்கின்றன. இந்த ரயில் நிலையத்தில் 20 ரயில் பாதைகளும் 18 நடைமேடைகளும் உள்ளன.

புது தில்லி ரயில் நிலையம்

நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள புது தில்லி ரயில் நிலையம் வட இந்தியாவில் மிகவும் பரபரப்பான ரயில் நிலையம் ஆகும். புது தில்லி ரயில் நிலையம் வழியாக தினமும் 270 பயணிகள் ரயில்கள் செல்கின்றன. இங்கு தடங்கள் மற்றும் தளங்களின் எண்ணிக்கை முறையே 18 மற்றும் 16 ஆகும்.

மேலும் படிக்க | இந்தியாவின் பரபரப்பான ரயில் நிலையம்... தினமும் 974 ரயில்கள்.. 10 லட்சம் பயணிகள்..!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

தென்னிந்தியாவில் அமைந்துள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இந்தியாவின் முதல் 5 ரயில் நிலையங்களில் ஒன்றாகும். ஒரு மதிப்பீட்டின்படி இங்கிருந்து தினமும் 50 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 30 ரயில் பாதைகள் மற்றும் 12 நடைமேடைகள் உள்ளன.

இந்திய ரயில்வே நமது பெருமைக்குரியது. இந்த இரயில்வே 66,687 கிமீ ஓடும் பாதையைக் கொண்டுள்ளது, இதன் காரணமாக இது உலகின் நான்காவது பெரிய ரயில் போக்குவரத்து நெட்வொர்க் என்று அழைக்கப்படுகிறது. தினமும் கோடிக்கணக்கானோர் ரயிலில் பயணிக்கின்றனர். இது நாட்டிலேயே மலிவான பயண முறையாகக் கருதப்படுகிறது. 

மேலும் படிக்க | அம்ரித் பாரத் திட்டம்... உலக தரத்தில் ரயில் நிலையங்கள்... பயன்பெறும் தமிழக ரயில் நிலையங்கள் பட்டியல்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News