நடிகர் அஜித் ஆலோசகராக இருக்கும் தக்சா அணி ஆளில்லா விமானங்களை இயக்கும் சர்வதேச போட்டியில் 2வது இடத்தைப் பெற்றுள்ளது.
நடிகர் அஜித்குமார் கடந்த மே மாதம் அண்ணாபல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜியின் ஆளில்லாத சிறிய ரக ட்ரோன் விமானத்தை வடிவமைக்கும் மாணவர் குழுவிற்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இதனிடையே ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாண்ட் மாநிலத்தில் உள்ள டால்பி நகரில் கடந்த 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையில் மருத்துவ சேவைக்கு உதவும் ஆளில்லா விமானங்களுக்கான என்ற போட்டி நடத்தப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாண்ட் மாநிலத்தில் உள்ள டால்பி நகரில் கடந்த 24ம் தேதி முதல் 28ம் தேதி வரையில் மருத்துவ சேவைக்கு உதவும் ஆளில்லா விமானங்களுக்கான என்ற போட்டி நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானம் தொடர்பான போட்டியின் இறுதிப்போட்டியில் தக்ஷா குழுவும் இடம் பெற்றிருந்தது. அஜித் மேற்பார்வையில் தக்ஷா அணியினர் உருவாக்கிய ஆளில்லா விமானம், அதிக நேரம் வானில் பறந்து சாதனை படைத்ததோடு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தது.