இந்திய கடலோர காவல்படையில் (மேற்கு) (ICGR West) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Motor Transport Fitter, Spray Painter, Motor Transport Mechanic ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
காலிப் பணியிட விவரம்:
இந்திய கடலோர காவல்படையில் (மேற்கு) காலியாக உள்ள Motor Transport Fitter, Spray Painter, Motor Transport Mechanic ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 07 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI, Diploma படித்தவராக இருக்க வேண்டும்.
அனுபவ விவரம்:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் Automobile Workshop-ல் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 02 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | PM Kisan: பிரதமர் கிசான் நிதியின் 12வது தவணை பெற இதைச் செய்யுங்கள்
அதேபோல், SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள் மற்றும் OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள் வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் Level 2 ஊதிய அளவின்படி, ரூ.19,900 மாத ஊதியமாக பெறுவார்கள்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்கு தகுதி பெற்ற நபர்கள் எழுத்துத் தேர்வு Trade / Skill Test வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
கடலோர காவல்படை பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202205310527349... என்ற தளத்தில் இருக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும். அதன் பிறகு, Coast Guard Region (West), Worli Sea Face P.O. Worli Colony, Mumbai – 400 030 என்ற முகவரிக்கு ஜூலை 9ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR